Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் வர்ணஜாலங்களில் மனதைக் மயக்கி சுவாரசியமாக்கும். நினைத்துப் பார்க்க முடியாட இடத்தில் தேடும் விலங்கை ஒளித்து வைத்து கண்ணாமூச்சி விளையாடும்.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் கலர்ஃபுல்லான ஒரு காட்டுப்பகுதியில் ஒரு மந்தி மறைந்திருக்கிறது. அதை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கதான் கில்லாடி.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வேலை நெருக்கடிகளில் சிக்கி சோர்ந்து போய் இருப்பவர்களுக்கு ரிலாக்ஸ் செய்யவும் உற்சாகம் அடையவும் உதவுகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் பார்ப்பவர்களின் மனதில் ஒரு மாயாஜாலம் நடத்துகிறது.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம், ஃபிரஷ்ஷர்ஸ் லைவ் தளத்தில் வெளியாகி உள்ளது. ஒரு அழகான கலர்ஃபுல்லான காட்டுப்பகுதியில் ஒரு மந்தி மறைந்திருக்கிறது. மந்தி என்றால், குரங்கு அதிலும் பெண் குரங்குக்குதான் மந்தி என்று பெயர். ஆண் குரங்குக்கு கடுவன் என்று பெயர். இந்த படத்தில் வண்ணமயமான இலைகளைக் கொண்ட மரங்கள் நிறைந்திருக்கிறது. இந்த கலர்ஃபுல் காட்டில் யாருமே இல்லாதடு போல தோன்றும் ஆனால், ஒரு குரங்கு மறைந்திருக்கிறது. அதை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என ஓபன் சேலஞ்ச் விடப்பட்டுள்ளது. அப்படி கண்டுபிடித்தால், ஆப்டிகல் இல்யூஷனில் நிஜமாவே நீங்க கில்லாடி. ஏனென்றால், குரங்கை எளிதாக கண்டுபிடித்துவிடலாம். ஆனால், 5 நொடிகளில் கண்டுபிடிக்க வேண்டும். அதற்கு கொஞ்சம் ஸ்மார்ட்டாக யோசிக்க வேண்டும் அவ்வளவுதான்.
இந்நேரம் நீங்கள் உங்கள் கூர்மையான பார்வையின் மூலம் இந்த படத்தில் கலர்ஃபுல்லான காட்டில் மறைந்திருக்கும் குரங்கைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். 5 நொடிகளுக்குள் குரங்கைக் கண்டுபிடித்துவிட்டிருந்தால், ஆப்டிகல் இல்யூஷனில் நிஜமாவே நீங்கதான் கில்லாடி. உங்களுக்கு பாராட்டுகள்.
ஒருவேளை, உங்களால் குரங்கைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தில் உள்ள மரத்தடியில் பாருங்கள். படத்தை நன்றாக உற்றுப் பார்த்து குரங்கை கண்டுபிடியுங்கள்.
இன்னும் உங்களால் இந்த படத்தில் அந்த குரங்கைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், பரவாயில்லை. உங்களுக்காக குரங்கு எங்கே இருக்கிறது என கண்டுபிடித்து வட்டமிட்டு காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"