ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் மறைந்திருக்கும் விலங்குகளை அல்லது பறவைகளைக் கண்டுபிடிப்பது என்பது வைக்கோல் போரில் தொலைந்துபோன ஊசியைத் தேடுவதைப் போன்றது. இன்னும் சரியாக சொல்வதென்றால், இது ஒரு கண்ணாமூச்சி விளையாட்டு அவ்வளவுதான். ஆனால், இங்கே நீங்கள் கண்களைத் திறந்துகொண்டுதான் தேடப் போகிறீர்கள்.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் காணப்படும் மரங்களில் ஒரு ஆந்தை மறைந்திருக்கிறது. அந்த ஆந்தையை 13 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. கண்டுபிடிதால் நீங்கள்தான் ஆப்டிகல் இல்யூஷன் மாஸ்டர்.
ஆப்டிகல் இல்யூஷன் விளையாட்டு நெட்டிசன்களால் மிகவும் சுவாரசியமானதாகப் பார்க்கப்படுகிறது. வேலை நெருக்கடிகளில் சிக்கித் தவிக்கும்போது ரிலாக்ஸ் செய்ய ஆப்டிகல் இல்யூஷன் புதிர் விளையாட்டுகள் உதவுகிறது.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் என்பது ஒரு மாயாஜாலம். ஒரு தந்திரம். அது நீங்கள் ஒரு படத்தை எந்த கோணத்தில் எப்படிப் பார்த்து உணர்கிறீர்கள் என்பதைப் பொறுத்து சவால்கள் உருவாக்கப்படுகிறது. உங்கள் கவனத்தை வேறு பக்கம் திருப்பும் விதமாக அமைக்கப்பட்டிருக்கும். உங்கள் மூளையைக் குழப்பி கண்ணாமூச்சி ஆடும்.
ட்விட்டர் சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ள இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மரங்கள் வரிசையாக இருக்கிறது. அருகே புல்வேளியும் புதர்களும் இருக்கிறது. அதே நேரத்த்தில் இந்த படத்தில் உள்ள மரங்களில் ஒரு ஆந்தை மறைந்திருக்கிறது. அந்த ஆந்தையை 13 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால், ஆப்டிகல் இல்யூஷன் புதிர் விளையாட்டில் நீங்கள்தான் மாஸ்டர். ஏனென்றால், உங்கள் கண்களை ஏமாற்றும் விதமாக ஆந்தை மறைந்திருக்கிறது. அதை கண்டுபிடிப்பது அவ்வளவு எளிதல்ல. மிகவும் கடினம்.
அதனால்தான், ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒரு மாயாஜாலாம், தந்திரம், கண்கட்டி வித்தை என்று கூறுகிறோம். ஆந்தை இரவு நேரத்தில் உலவும் பறவை. இரவு நேரங்களில் மட்டுமே வேலைகளை செய்து பகலில் உறங்குபவர்களை நாக்டர்னல் என்பார்கள். இந்த ஆந்தை ஒரு இரவுலாவி பறவை.
இந்நேரம் நீங்கள் இந்த படத்தில் மறைந்துள்ள ஆந்தையை கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். 13 நொடிகளில் ஆந்தையை கண்டுபிடித்துவிட்டிருந்தால், ஆப்டிகல் இல்யூஷனில் நிஜமாவே நீங்கதான் மாஸ்டர். உங்களுக்கு பாராட்டுகள்.
ஒருவேளை, உங்களால் ஆந்தையைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். ஆந்தை ஓரமாக இருக்கும் மரத்தில் இருக்கிறது. இப்போது படத்தை நன்றாக உற்றுப் பார்த்து கண்டுபிடியுங்கள்.
இன்னும் உங்களால் இந்த படத்தில் மறைந்திருக்கும் ஆந்தையைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், பரவாயில்லை. உங்களுக்காக ஆந்தை எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.