/tamil-ie/media/media_files/uploads/2023/04/owl-1-1.jpg)
ஆப்டிகல் இல்யூஷன்
ஆப்டிகல் இல்யூஷன்
Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் விளையாட்டு நெட்டிசன்களால் மிகவும் விரும்பப்படும் புதிர் விளையாட்டாக விளங்கி வருகிறது. நீங்கள் ஒருமுறை ஆப்டிகல் இல்யூஷன் புதிர் சவாலை ஏற்று விளையாடினீர்கள் அதற்குப் பிறகு உங்களை யாராலும் அதில் இருந்து விலக்கவே முடியாது. அந்த அளவுக்கு ஆப்டிகல் இல்யூஷன் சவால் சுவாரசியமானது.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உள்ள மரத்தில் மறைந்திருக்கும் ஆந்தையை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் கிங். ஏனென்றால், அந்த அளவுக்கு சவாலானது.
ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒன்றுமில்லை. அது ஒரு தந்திரம். ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு மேஜிக். ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே உங்கள் கண்களை ஏமாற்றும் கண்கட்டி வித்தை. உங்கள் மூளையைக் குழப்பும் பெருங்குழப்பம். ஆனால், நீங்கள் ஸ்மார்ட்டாக யோசித்தால், ஆப்டிகல் இல்யூஷன் நீங்கள் த்ரில்லிங்காக விளையாடும் ஒரு சுவாரசியமான விளையாட்டு. வேண்டுமானால், இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தின் சவாலை விளையாடிப் பாருங்கள்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் Birding Beijing தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் இலைகள் உதிர்ந்துவிட்ட ஒரு மரத்தில் ஒரு ஆந்தை அமர்ந்திருக்கிறது. ஆனா, அந்த ஆந்தை எங்கே இருக்கிறது என தெரியவில்லை. அதனால், இந்த மரத்தில் மறைந்திருக்கும் ஆந்தை எங்கே இருக்கிறது என 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் கிங். ஏனென்றால், இது அந்த அளவுக்கு சவாலானது. நீங்கள் ட்ரை பண்ணி பாருங்கள்.
அதற்கு முன்னதாக, ஆந்தையைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள். ஆந்தைகள் பெரும்பாலும் தனித்தே காணப்படும். ஆந்தை இனத்தில் மொத்தம் 133 வகைகள் உள்ளன. ஆந்தை பறவையை பேய், பூத பிசாசுகளோடு ஒப்பிட்டு அதை ஒரு துஷ்ட பறவையாக சித்தரித்து விட்டனர். இதனால், ஆந்தைகள் காரணமின்றி கொல்லப்பட்டிருக்கின்றன.
ஆந்தைகள் காடுகள், பாலைவனங்கள், புல்வெளிகள், வயல்வெளிகள் மற்றும் மரங்கள் நிறைந்த இடங்களில் வாழ்கிறது. ஆந்தைகள் 1 கிலோ முதல் 4 கிலோ வரை எடை கொண்டவை.
பெண் ஆந்தைகள் ஆண் ஆந்தைகளை விட பெரியதாக இருக்கும். இந்து மத புராணங்களில் ஆந்தையை லட்சுமி தேவியின் வாகனமாக கருதப்படுகிறது.
மேலை நாடுகளில் ஆந்தை, ஞானத்தின் சின்னமாகவும் அறிவின் சின்னமாகவும் பார்க்கின்றனர். இதனால் தான் பல கல்வி நிறுவனங்கள் ஆந்தையின் சின்னத்தை வைத்திருக்கிறார்கள். நம் நாட்டில் அதை கெட்ட ஒரு சகுனத்தின் குறியீடாக பார்க்கப்படுகிறது.
மற்ற பறவைகள் பறக்கும் போது படபடவென ஓசை எழுப்பும். ஆனால் ஆந்தையின் இறக்கைகள் மிக மென்மையாக இருப்பதால் பறக்கும்போது ஒலியை எழுப்பாது.
இறக்கைகள் மிருதுவாக இருப்பதால் மழையின் போது பறக்க முடியாமல் போய்விடும். ஆந்தை தனது கழுத்தை 359 டிகிரி அளவுக்கு சுழற்றும் தன்மையுடையது.
ஆந்தைகள் தூரப்பார்வை கொண்டவை. பல ஆந்தைகள் முழு இருட்டிலும் ஒளியை கவனித்து வேட்டையாடக் கூடியவை.
ஆந்தைகள் தனது இறக்கைகளை பயன்படுத்தி தண்ணீரில் கடினமாக நீந்தக் கூடிய தன்மை கொண்டது.
பொதுவாக ஆந்தைகள் ஒரு இரவுலாவி என்று கூறப்படுகிறது. பெரும்பாலான ஆந்தைகள் பகலிலும் விழித்திருந்து இரையை தேடும்.
நீங்கள் இந்நேரம் இந்தப் மரத்தில் மறைந்திருக்கும் ஆந்தையைக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷனில் விடை கண்டுபிடிப்பதில் நீங்கள்தான் கிங். உங்களுக்கு பாராட்டுகள்.
ஒருவேளை உங்களால் இன்னும் இந்த படத்தில் மறைந்திருக்கும் ஆந்தையை அடையாளம் காணமுடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். ஆந்தை எங்கே இருக்கிறது என ஒரு குறிப்பு தருகிறோம். மரத்தின் மையப் பகுதியில் கவனமாகப் பாருங்கள். ஆந்தை உங்கள் கண்ணில் அகப்படலாம்.
இப்போது இந்த படத்தில் மரத்தில் மறைந்திருக்கும் ஆந்தையை எளிதாகக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆனாலும், சிலரால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள். அவர்களுக்காக, ஆந்தை எங்கே இருக்கிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.