கழுகுக் கண் கொண்டு தேடுங்கள்… 50 நொடிகளில் ஆந்தையை கண்டுபிடிச்சா நீங்கதான் ஹீரோ!
Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஒரு வீட்டின் வரவேற்பறையில் ஒரு ஆந்தை இருக்கிறது அந்த ஆந்தையை 50 நொடிகளில் கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான் உங்கள் கூர்மையான பார்வைக்கு விடப்படும் சவால். அப்படி கண்டுபிடித்தால் நிஜமாவே நீங்கள் ஹீரோதான்.
Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மிகவும் சுவாரசியமானவை அதே நேரத்தில் வேடிக்கையானதும்கூட. ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் மறைந்திருக்கும் விலங்குகளைக் கண்டுபிடிப்பது என்பது வைக்கோல் போரில் ஊசியைத் தேடுவதைப் போன்றது.
Advertisment
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஒரு வீட்டின் வரவேற்பறையில் ஒரு ஆந்தை இருக்கிறது அந்த ஆந்தையை 50 நொடிகளில் கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான் உங்கள் கூர்மையான பார்வைக்கு விடப்படும் சவால். அப்படி கண்டுபிடித்தால் நிஜமாவே நீங்கள் ஹீரோதான்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மேலோட்டமாகப் பார்ப்பதற்கு ஏதோ ஒரு இணையப் பொழுதுபோக்கு விளையாட்டாகத்தான் தெரியும். ஆனால், இது உங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் நல்ல பயிற்சி அளிக்கும். உங்கள் மன அழுத்தங்களில் இருந்து திசை திருப்பி ரிலாக்ஸாக இருக்க வைக்கும். அதனால்தான், நெட்டிசன்கள் இணையத்தில் ஆப்டிகல் இல்யூஷன் படங்களை நோக்கி படையெடுத்து வருகிறார்கள்.
உலகம் முழுவதும் நாள்தோறும் பல நூறு ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது. எல்லா ஆப்டிகல் இல்யூஷன் படங்களும் அதன் அளவில் சவாலானதுதான்.
யூடியூபில் வெளியான இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம், ஒரு வீட்டின் வரவேற்பறையைக் காட்டுகிறது. டீப்பாய், குழல், குழல் விளக்கு, சுவர் ஓவியங்கள் என்று அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தில் ஒரு ஆந்தை இருக்கிறது. அந்த ஆந்தையை நீங்கள் சாதாரணமாகப் பார்த்தால் தெரியாது. கழுகுக் கண் கொண்டு தேடினால் மட்டுமே ஆந்தையைக் கண்டுபிடிக்க முடியும். நீங்கள் இந்த படத்தில் உள்ள ஆந்தையை 50 நொடிகளில் கண்டுபிடித்தால், ஆப்டிகல் இல்யூஷனில் நிஜமாவே நீங்க ஹீரோதான். ஏனென்றால், இந்த புதிர் அந்த அளவுக்கு சவாலானது.
ஆந்தைகள் இரவு நேரத்தில் உலாவும் பறவை. அவை பகலில் தூங்கும். இரவில் இரை தேடும். இரவில் மட்டுமே விழித்திருந்து செயல்பட்டு பகலில் தூங்கும் மனிதர்களை (Nocturnal) என்று அழைப்பார்கள்.
நீங்கள் இந்நேரம் இந்த படத்தில் உள்ள ஆந்தையை கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நிஜமாவே ஆப்டிகல் இல்யூஷன் சவால்களை தீர்ப்பதில் நீங்கள் ஹீரோதான். உங்களுக்கு எங்கள் பாராட்டுகள்.
ஒருவேளை நீங்கள் இந்த படத்தில் ஆந்தையைக் கண்டுபிடிக்கவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். முதலில், ஆந்தையைக் கழுகு கண் கொண்டு தேடுங்கள் என்று கூறினோம் இல்லையா. படத்தை ஜூம் செய்து நெருக்கமாகப் பாருங்கள். ஆந்தை படம் தெரியும் பாருங்கள்.
இன்னும் உங்களால் ஆந்தையைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் பரவாயில்லை. ஆந்தை எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம். தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள். கண்ணுக்கும் மூளைக்கும் நல்ல பயிற்சியாக இருக்கும். ரிலாக்ஸாக இருக்க வைக்கும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"