Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் என்பது மனித மூளை ஒரு காட்சியைப் பார்த்து உணர்ந்து புரிந்துகொள்வதை சவால் செய்கிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உங்கள் மூளையின் திறனை மேம்படுத்துவதற்கான வழிகளில் ஒன்று.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் இடம்பெற்றுள்ள ஓவியத்தில் மனிதர்கள் இடையே மறைந்திருக்கும் பாண்டா கரடியை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்க ஆப்டிகல் இல்யூஷனில் கிரேட். முயற்சி செய்து பாருங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு வகையான மனோ பகுப்பாய்வு என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மனிதர்கள் ஒரு காட்சியைப் பார்த்து எப்படி உணர்ந்து புரிந்துகொள்கிறார்கள் என்பதை வெளிப்படுத்துகிறது. மனிதர்களின் மூளை பொதுவாக வெவெறு கோணங்களில் இருந்து காட்சிகளை அல்லது படங்களை பார்க்க முடியும், ஒவ்வொரு கோணத்தில் இருந்தும் பார்க்கப்படும்போது வேறுபட்ட ஒரு காட்சியை உருவாக்குகிறது.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் Bright Side தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படம் ஒரு டிஜிட்டல் ஓவியம், இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், மனிதர்களின் கண்களை பாண்டாவின் கண்களைப் போல கருப்பு வட்டங்களால் சித்தரித்து இருக்கிறார்கள். இந்த படத்தில் மனிதர்கள் இடையே ஒரு பாண்டா கரடி உள்ளது. ஆனால், மேலோட்டமாகப் பார்த்தால் அந்த பாண்டா கரடி தெரியாது. ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் கூர்மையான பார்வையுள்ள கிரேட் மனிதர்களால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். அதனால், இந்த ஓவியத்தில் மனிதர்கள் இடையே மறைந்திருக்கும் பாண்டா கரடியை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்க ஆப்டிகல் இல்யூஷனில் கிரேட். முயற்சி செய்து பாருங்கள்.
நீங்கள் இந்நேரம் இந்த படத்தில் மறைந்திருக்கும் பாண்டா கரடியைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்கள் கிரேட் தான். உங்களுக்கு பாராட்டுகள்.
ஆனால், சிலர் பாண்டா கரடியை அடையாளம் காண முடியாமல் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். படத்தின் நடுவில் கூர்மையாகப் பாருங்கள். பாண்டாவின் முகம் தெரியும்.
நீங்கள் இப்போது மிகவும் எளிதாக பாண்டா கரடியைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள். உங்களுக்கும் பாராட்டுகள். ஆனால், சிலர் இந்த ஓவியத்தில் பாண்டாவை அடையாளம் காண முடியவில்லை என்று கூறுகிறார்கள். அவர்களுக்காக, பாண்டா கரடி எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம் பாருங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.