New Update
/tamil-ie/media/media_files/uploads/2022/10/Optical-illusion-Puma.jpg)
Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், பெரிய பூனை வகையைச் சேர்ந்த, சிங்கத்தைப் போல இருக்கும் பூமா இந்த மலையில் மறைந்திருக்கிறது. அதை 10 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று சவால் விடப்படுகிறது.
Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் முன்னெப்போதும் இல்ல்லாத அளவி இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் அதிக அளவில் வெளியாகி வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் மறைந்திருக்கும் விலங்குகளை வெறித்தனமாகத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மயங்கிப்போன நெட்டிசன்கள் எப்போது ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெளியாகும் எப்போது தேடிக் கண்டுபிடிப்பது என்று காத்திருக்கிறார்கள். அவர்களுக்காகவே இதோ ஒரு ஆப்டிகல் இல்யூஷன் படத்தை தருகிறோம்.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், பெரிய பூனை வகையைச் சேர்ந்த, சிங்கத்தைப் போல இருக்கும் பூமா இந்த மலையில் மறைந்திருக்கிறது. அதை 10 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று சவால் விடப்படுகிறது.
ஆப்டிகல் இல்யூஷன் என்றதும், ஏதோ ஒரு புதிய விளையாட்டு என்று மிரட்சி அடையாதீர்கள். மனிதர்களின் பொதுவான பார்வைக் கோணத்தை அடிப்படையாகக் கொண்டு படத்தில் இல்யூஷன் செய்து மறைக்கப்பட்டிருக்கும் பொருட்கள், விலங்குகள், பறவைகளைக் கண்டுபிடிக்க சவால் விடப்படுகிறது.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் என்பது ஒரு தந்திரம். அது ஒரு மாயாஜாலம், அது உங்கள் கன்களை ஏமாற்றும் கண்கட்டி வித்தை, உங்கள் மூளையைக் குழப்பி தலைமுடியை பிச்சிக்கொள்ளச் செய்யும் சுவாரசியமான புதிர். ஆனால், நீங்கள் கொஞ்சம் ஸ்மார்ட்டாக யோசித்து தேடினால் மிகவும் எளிதாக இருக்கும்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் பிரஷர்ஸ்லைவ் தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் ஒரு மலை காணப்படுகிறது. இந்த மலையில், பெரிய பூனை குடும்பத்தைச் சேர்ந்த, சிங்கத்தைப் போன்ற பூமா ஒன்று மறைந்திருக்கிறது. மலையில் பூமா என்கே மறைந்திருக்கிறது என்று 10 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால், ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் கெட்டிக்காரர். ஏனென்றால், பூமாவை 10 நொடிகளில் கண்டுபிடிப்பது அவ்வளவு எளிதல்ல.
நீங்கள் இந்நேரம் இந்த படத்தில் உள்ள மலையில் மறைந்திருக்கும் பூமாவை கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நிஜமாவே நீங்கள் ஆப்டிகல் இல்யூஷனில் கெட்டிக்காரர்தான். உங்களுக்கு பாராட்டுகள்.
ஒருவேளை, நீங்கள் இன்னும் பூமாவைக் கண்டுபிடிக்கவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். பூமாவை படத்தின் மேல் பகுதியில் தேடுங்கள். மீண்டும் ஒருமுறை படத்தை நன்றாக உற்றுப் பார்த்து தேடுங்கள்.
இப்போது நீங்கள் எளிதாக பூமாவை கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள். கண்டுபிடிக்கவில்லை என்றால் பரவாயில்லை. மலையில் பூமா எங்கே மறைந்திருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே ஒரு இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டு மட்டுமல்ல அது உங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கிற விளையாட்டு. அதனால், தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் உள்ள ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.