New Update
/tamil-ie/media/media_files/uploads/2022/11/Optical-snake-1.jpg)
Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஒட்டகச்சிவிங்களுக்கு இடையே கலந்திருக்கும் மலைப் பாம்பை 10 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. கண்டுபிடித்தால் நீங்கதான் மாஸ் ஹீரோ.
Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் என்பது அர்த்தமில்லா விளையாட்டாக இருக்கலாம், ஆனால், சுவாரசியமான விளையாட்டு. ஒருமுறை விளையாடிப் பார்த்தால், விளையாடிக் கொண்டே இருப்பீர்கள். குழப்பம், த்ரில்லிங் என அனுபவமாவதைப் பார்ப்பீர்கள்.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஒட்டகச்சிவிங்களுக்கு இடையே கலந்திருக்கும் மலைப் பாம்பை 10 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கதான் மாஸ் ஹீரோ.
ஆப்டிகல் இல்யூஷன் சவால்களுக்கான அடிப்படை மனிதர்களின் பொதுவான பார்வைக் கோணம்தான். மனிதர்கள் எப்படி ஒரு காட்சியைப் பார்த்து உணர்ந்து புரிந்துகொள்கிறார்கள் என்பதை வைத்துதான் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உருவாக்கப்படுகின்றன. மற்றொரு விஷயம், பொதுவாக எல்லா உயிரினங்களும் பரிணாமவளர்ச்சியின் அடிப்படையில் தோன்றியதால் எல்லாவற்றிலும் ஏதோ ஒரு கூறு ஒற்றுமை இருப்பதை தெரிந்துகொள்ளலாம். நிறம், தோல், உடல் அமைப்பு, உடல் உறுப்புகள், உடற்கூறு, உணவு, என ஏதோ ஒன்று ஒற்றுமை இருக்கும். அப்படித்தான், இந்த ஆப்டிகல் இல்யூஷன் அமைந்துள்ளது.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த படம் ஒரு டிஜிட்டல் ஓவியம். இதில், ஒட்டகச்சிவிங்கிகள் காணப்படுகின்றன. இந்த ஒட்டகச்சிவிங்கிகள் இடையே ஒரு மலைப் பாம்பு இருக்கிறது. அந்த பாம்பு எங்கே இருக்கிறது என கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் மாஸ் ஹீரோ.
நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மலைப் பாம்பை கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் மாஸ் ஹீரோதான். உங்களுக்கு பாராட்டுகள்.
ஆனால், பலரும் இந்த படத்தில் மலைப் பாம்பு இல்லை என்று கூறுகிறார்கள். ஆனால், ஸ்மார்ட்டானவர்கள் கண்டுபிடித்துவிட்டதாகக் கூறுகிறார்கள்.
சிலர் மலைப் பாம்பு எங்கே இருக்கிறது என்று தேடித் தேடி கண்டுபிடிக்க முடியாமல் மலைத்துப் போய்விட்டதாகக் கூறுகிறார்கள். அவர்களுக்காக இந்த படத்தில் மலைப் பாம்பு எங்கே மறைந்திருக்கிறது என்று கண்டுபிடிக்க ஒரு குறிப்பு தருகிறோம். பாம்பு தலை கீழாக தொங்குகிறது. கவனமாகப் பாருங்கள்.
இப்போது நீங்கள் மலைப் பாம்பை கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நிஜமாவே நீங்கள் மாஸ் ஹீரோதான். இன்னும் கண்டுபிடிக்காதவர்களுக்கு மலைப் பாம்பு எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.