New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/02/Python-1-1.jpg)
Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் சவால்கள் இணையத்தையே கலக்கி வருகிறது. ஒரு ராட்சத காந்தம் போல நெட்டிசன்களை ஈர்த்து வருகிறது. லட்சக் கணக்கான நெட்டிசன்கள் ஆப்டிகல் இல்யூஷன் படங்களை நோக்கி படையெடுத்து வருகிறார்கள்.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் புதரில் மறைந்திருக்கும் மலைப் பாம்பை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டில இல்யூஷனில் நீங்க பலே கில்லாடி.
ஆப்டிகல் இல்யூஷன் சவாலுக்கு பொருத்தமான ஒரு பழமொழி சொல்ல வேண்டும் என்றால், அது “கண்ணால் காண்பது பொய் காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்” என்பதுதான் பொருத்தமாக இருக்கும். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படமும் அதையே வழிமொழிகிறது.
The one sitting on his throne on edge of Forest. Guess what. pic.twitter.com/UTaYPUuudn
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) February 9, 2023
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தை ஐ.எஃப்.எஸ் அதிகாரி பர்வீன் கஸ்வான் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவர் இந்த படத்தில் ஒரு பர்மிய மலைப் பாம்பு இருப்பதைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த படத்தை நெட்டிசன்களின் பொழுதுபோக்கு ஆப்டிகல் இல்யூஷன் புதிருக்காக பயன்படுத்துகிறோம். இந்த படத்தில் ஒரு மரத்தின் அருகே உயர்ந்து படர்ந்துள்ள ஒரு கொடியின் புதரில் ஒரு மலைப் பாம்பு இருக்கிறது. அந்த மலைப் பாம்பு எங்கே இருக்கிறது என்று 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்க பலே கில்லாடி. ஏனென்றால், அது அவ்வளவு சுலபமல்ல.
நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் கொடியின் புதரில் மறைந்திருக்கும் மலைப் பாம்பை கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் நிஜமாவே பலே கில்லாடிதான். உங்களுக்கு பாராட்டுகள்.
ஆனால், பலரும் இந்த படத்தில் மலைப் பாம்பு எங்கே இருக்கிறது என்று கேட்கிறார்கள். அவர்களுக்காக இந்த படத்தில் மலைப் பாம்பு எங்கே பதுங்கியிருக்கிறது என்று கண்டுபிடிக்க ஒரு குறிப்பு தருகிறோம். கொடியின் புதர் மரத்தை தொடும் இடைத்தில் கவனமாகப் பாருங்கள். மலைப் பாம்பைக் கண்டுபிடித்துவிடலாம்.
இந்நேரம் நீங்கள் மலைப் பாம்பைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நிஜமாவே நீங்கள் பலே கில்லாடிதான். ஆனால், மலைப் பாம்பைக் கண்டுபிடிக்காதவர்களுக்கு மலைப் பாம்பு எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.