/tamil-ie/media/media_files/uploads/2022/09/can-you-spot-the-rabbit.jpg)
Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் பார்ப்பவர்களின் மனதில் மாயாஜாலங்களை நிகழ்த்துகிறது. பார்ப்பவர்களின் கண்களை ஏமாற்றுகிறது. சவால்களை ஏற்பவர்களின் மூளையைக் குழப்பி தலைமுடியை பிச்சிக்கொள்ளச் செய்கிறது.
ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் மறைந்திருக்கும் விலங்குகள் நீங்கள் நினைத்துப் பார்க்கமுடியாத இடத்தில் நீங்கல் யோசிக்கவே முடியாத கோணத்தில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும். ஏனென்றால், ஆப்டிகல் இல்யூஷன் பொதுவாக மனிதர்கள் பார்க்கும் கோணத்தையும் ஒரு படத்தை எப்படி பார்த்து உணர்கிறார்கள் என்பதை அடிப்படையாக வைத்து உருவாக்குகிறார்கள்.
/tamil-ie/media/media_files/uploads/2022/09/can-you-spot-the-rabbit-1.jpg)
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், மறைந்திருக்கும் முயலை 30 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று ஒரு ஓபன் சேலஞ்ச் செய்யப்பட்டுள்ளது. இந்த கோட்டோவியத்தில் முயலைக் கண்டுபிடித்தால் நீங்கதான் ஜீனியஸ். ஏனென்றால், அது அவ்வளவு எளிதல்ல.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மிகவும் சுவாரசியமானதாக உள்ளது. ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் மறைந்திருக்கும் சிங்கம், புலி, கரடி, சிறுத்தை போன்ற விலங்குகளைக் கண்டுபிடியுங்கள் என்றாலே நெட்டிசன்கள் உடனே உற்சாகம் அடைந்து வெறித்தமாகத் தேடத் தொடங்கி விடுகிறார்கள். ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உங்களை ரிலாக்ஸ் செய்து உற்சாகப்படுத்தும்.
/tamil-ie/media/media_files/uploads/2022/09/Optical-illusion-rabbit-1-1.jpg)
அந்த வகையில், பிண்டெரெஸ்ட் தளத்தில் வெளியாகியுள்ள இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் ஒரு கோட்டோவியம். இதில் மரங்கள், பூச்செடிகள், நீரோடை, புதர், பறவை போன்றவை இருக்கிரஹ்டு. ஆனால், இதில் ஒரு முயல் மறைந்திருக்கிறது. அந்த முயலை 30 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று அனைவருக்கும் சவால் விடப்பட்டுள்ளது. அப்படி கண்டுபிடித்தால் நீங்கள்தான் ஜீனியஸ். ஏனென்றால், இந்த படத்தில் உள்ள முயலைக் கண்டுபிடிப்பது அவ்வளவு சுலபமல்ல. ஒரு ஜீனியஸால்தான் முடியும்.
சிலர் ஒரு புதிர் போட்டுவிட்டு உங்களால் தலைகீழாக நின்றால்கூட கண்டுபிடிக்க முடியாது என்பார்கள் இல்லையா. அது போல, இந்த படத்தில் உள்ள முயலைக் கண்டுபிடிப்பது என்பது கடினம்தான்.
இந்நேரம் நீங்கள் இந்த படத்தில் உள்ள முயலைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். 30 நொடிகளுக்குள் கண்டுபிடித்திருந்தால் நீங்கள் ஜீனியஸ்தான். உங்களுக்கு பாராட்டுகள்.
ஒருவேளை உங்களால் கண்டுபிடிக்கமுடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு ஒரு குறிப்பு தருகிறோம். நீக்கள் தலைகீழாக நிற்க வேண்டாம். படத்தை தலை கீழாகப் பாருங்கள் முயல்குட்டியை கண்டுபிடிக்கலாம்.
இன்னும் உங்களால் முயலை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். இதோ உங்களுக்காக முயல் எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம்.
/tamil-ie/media/media_files/uploads/2022/09/OI-Rabbit-ans.jpg)
ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் புதிர் என்பது வெறுமனே ஒரு இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டு அல்ல. கண்ணுக்கும் மூளைக்கும் நல்ல பயிற்சி அளிப்பவையாகவும் இருக்கிறது. தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.