Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் மறைந்திருக்கும் விலக்குகளைக் கண்டுபிடிப்பது என்பது வைக்கோல் போரில் ஊசியைத் தொலைத்துவிட்டு தேடுவது போன்றது. இன்னும் சரியாகச் சொல்வதென்றால் பளபளக்கும் கண்ணாடி கற்களுக்கு மத்தியில் துளியுண்டு வைரக் கல்லைத் தேடுவதைப் போன்றது.
ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் விலங்குகளைத் தேடுவது மிகவும் சுவாரசியமானது. நீங்கள் தேடுகிற விலங்கு எங்கோ மறைந்திருக்கும் ஆனால், படமோ உங்கள் கவனத்தை வேறு எங்கோ திசை திருப்பி தேட வைக்கும். உங்களை சுற்றவிட்டு சுறுசுறுப்பாக்கும்.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் யானைகளுக்கு நடுவே ஒரு காண்டா மிருகம் மறைந்திருக்கிறது. அந்த காண்டாமிருகத்தை கண்டால் சொல்லுங்கள். 8 நொடிகளில் கண்டுபிடித்தால் நீங்கதான் ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் கெட்டிக்காரருங்க. ஏனென்றால், இந்த புதிர் மிகவும் சவாலானது.
பூமியில் பெரிய விலங்குகள் என்றால் அது யானையும் காண்டாமிருகமும்தான். தும்பிக்கை இல்லாவிட்டால் யானையின் உடலும் காண்டாமிருகத்தின் உடலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். இந்த சிறிய ஒற்றுமையைப் பயன்படுத்தி, ட்விட்டரில், யானைகளுக்கு நடுவே ஒரு காண்டாமிருகத்தை மறைத்து வைத்து ஒரு ஆப்டிகல் இல்யூஷன் புதிர் படம் வெளியாகி இருக்கிறது.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் ஒரு டிஜிட்டல் ஓவியம். இதில் யானைகள் கூட்டமாக இருக்கிறது. யானைகள் பந்து விளையாடுகிறது. முட்டை கோஸ்களை பறிக்கிறது. யானைகள் கொண்டாட்டமாக விளையடுகிறது. யானைகளின் கொண்டாட்டங்களில் ஒரு காண்டாமிருகமும் பங்கெடுத்துள்ளது. ஆனால், அந்த காண்டாமிருகம் மறைந்திருக்கிறது. அந்த காண்டாமிருகத்தை கண்டுபிடிக்க முடியுமா என்பதுதான் ஓபன் சேலஞ்ச். ஆனால், அதை அவ்வளவு சீக்கிரம் கண்டுபிடிக்க முடியாது. அதனால், நீங்கள் காண்டாமிருகத்தைக் கண்டா சொல்லுங்க. கண்டுபிடித்துவிட்டால், நீங்கள் ஆப்டிகல் இல்யுஷனில் கெட்டிக்காரர் தான்.
இந்நேரம் நீங்கள் இந்த படத்தில் மறைந்திருக்கும் காண்டாமிருகத்தைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். உங்களுக்கு பாராட்டுகள் நிஜமாகவே ஆப்டிகல் இல்யூஷனில் நீங்க கெட்டிக்காரர்தான்.
ஒருவேளை நீங்கள் காண்டாமிருகத்தைக் கண்டுபிடிக்கவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். காண்டாமிருகத்துக்கும் யானைக்கும் தும்பிக்கைதான் வித்தியாசம் என்று முதலிலேயே குறிப்பிட்டிருந்தோம். இப்போது, இந்த படத்தை மீண்டும் ஒருமுறை நன்றாக உற்றுப் பார்த்து காண்டாமிருகத்தைத் தேடுங்கள்.
யானைகள் நிறைந்திருக்கும் படத்தில் மறைந்திருக்கும் காண்டாமிருகத்தை உங்களால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், பரவாயில்லை. காண்டாமிருகம் எங்கே இருக்கிறது என்று காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மிகவும் சுவாரசியமானவை மட்டுமல்ல, உங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிப்பவை. தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.