Advertisment

காட்டு எருமைகளுடன் மேயும் காண்டாமிருகம்... 15 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க அதிபுத்திசாலி!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் காட்டு எருமைகளுடன் மேய்ந்து கொண்டிருக்கும் காண்டாமிருகத்தை 15 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் நீங்கதான் அதிபுத்திசாலி.

author-image
WebDesk
New Update
Rhino

காட்டு எருமைகளுடன் மேய்ந்து கொண்டிருக்கும் காண்டாமிருகத்தை கண்டுபிடிக்க முடியுமா

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள்தான் சமூக ஊடகங்களின் காலத்தில் சுவாரசியமான விளையாட்டாக இருக்கிறது. இந்த படத்தில் மறைந்திருக்கும், சிங்கம், புலி, கரடி, காண்டாமிருகம், யானையைக் கண்டுபிடியுங்கள் என்றால் நெட்டிசன்கள் பரபரப்பாகி வெறித்தனமாகத் தேடத் தொடங்கிவிடுகிறார்கள்.

Advertisment

Rhino

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் காட்டு எருமைகளுடன் சேர்ந்து மேய்ந்துகொண்டிருக்கும் காண்டாமிருகத்தை 15 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால். அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனின் நீங்கதான் அதிபுத்திசாலி.

ஆப்டிகல் இல்யூஷன் என்ற பெயரைக் கேட்டு ஏதோ புரியாத விளையாட்டு என்று நினைத்துவிடாதீர்கள். குழந்தைகள் விளையாடும் கண்ணாமூச்சி விளையாட்டு போலத்தான் இதுவும். படத்தில் மறைந்திருக்கும் விலங்குகளைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். கண்ணாமூச்சியில் கண்கள் கட்டப்பட்ட நிலையில் தேடிப் பிடிக்க வேண்டும். இதில் கண்கள் திறந்தபடி தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். அவ்வளவுதான் வித்தியாசம்.

Rhino

இந்த ஆப்டிகல் இல்யூஷன் எக்ஸ் சமூக வலைதளத்தில் BinaryX பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஒரு காட்டில் காட்டு எருமைகள் கூட்டமாக மேய்ந்து கொண்டிருக்கின்றன. இந்த காட்டு எருமைகளுடன் ஒரு காண்டாமிருகம் சேர்ந்து மேய்ந்துகொண்டிருக்கிறது. அந்த காண்டாமிருகம் எங்கே இருக்கிறது என 15 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கதான் அதிபுத்திசாலி. உருவத்தில் காட்டு எருமையும் காண்டாமிருகமும் ஒரே மாதிரியானவைதான். தொலைவில் இருந்து பார்த்தால் ஒரு தோற்ற மயக்கம் தெரியும். அதனால்தான், ஆப்டிகல் இல்யூஷனை ஒரு தோற்ற மயக்கம், காட்சிப்பிழை என்று கூறுகிறார்கள். ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் காகிதப் பூக்களுக்கு இடையே நிஜமானப் பூவைக் கண்டுபிடிப்பதைப் போன்றது. நகல்களுக்கு இடையே அசலைக் கண்டுபிடிப்பதைப் போன்றது. ஒரு விளையாட்டு ஒரே நேரத்தில் கடினமாகவும் எளிதாகவும் இருக்கும் என்றால் அது ஆப்டிகல் இல்யூஷன் விளையாட்டுதான்.

நீங்கள் இந்நேரம் இந்தப் படத்தில் காட்டு எருமைகள் உடன் மேயும் காண்டாமிருகம் எங்கே இருக்கிறது என கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷனில் விடை கண்டுபிடிப்பதில் நீங்கள் அதிபுத்திசாலிதான். உங்களுக்கு பாராட்டுகள்.

Rhino

ஒருவேளை உங்களால் இன்னும் இந்த படத்தில் காண்டாமிருகத்தை அடையாளம் காணமுடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். காண்டாமிருகம் எங்கே இருக்கிறது என ஒரு குறிப்பு தருகிறோம். இடது பக்கம் கவனமாகப் பாருங்கள். காண்டாமிருகத்தைக் காணலாம்.

இப்போது படத்தில் மறைந்திருக்கும் காண்டாமிருகத்தை எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆனாலும், சிலரால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள். சிலர் இந்த படத்தில் காண்டாமிருகம் இல்லை என்று கூறுகிறார்கள். அவர்களுக்காக, காண்டாமிருகம் எங்கே இருக்கிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம்.

Rhino

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral Photo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment