Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைப் போல, சமூக ஊடகங்கள் கோலோச்சும் காலத்தில் ஒரு சுவாரசியமான விளையாட்டு இல்லை என்றே கூறலாம். அதிலும், இந்த படத்தில் மறைந்திருக்கும், சிங்கம், புலி, கரடி, காண்டாமிருகம், யானையைக் கண்டுபிடியுங்கள் என்றால் நெட்டிசன்க பரபரப்பாகி வெறித்தனமாகத் தேடதொடங்கிவிடுகிறார்கள்.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் யானைக் கூட்டத்தில் கலந்துவிட்ட காண்டாமிருகத்தை 3 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனின் அதிசயம் அது.
ஆப்டிகல் இல்யூஷன் கண்ணுக்கும் மூளைக்கும் வேலை தருகிற ஒரு இணைய பொழுதுபோக்கு புதிர் விளையாட்டு. ஆப்டிகல் இல்யூஷன் என்ற பெயரைக் கேட்டு ஏதோ புரியாத விளையாட்டு என்று நினைத்துவிடாதீர்கள். குழந்தைகள் விளையாடும் கண்ணாமூச்சி விளையாட்டு போலத்தான் இதுவும். படத்தில் மறைந்திருக்கும் விலங்குகளைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். கண்ணாமூச்சியில் கண்கள் கட்டப்பட்ட நிலையில் தேடிப் பிடிக்க வேண்டும். இதில் கண்கள் திறந்தபடி தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். அவ்வளவுதான் வித்தியாசம்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் வெளியாகி உள்ளது. உருவத்தில் யானையும் காண்டாமிருகமும் ஒரே மாதிரியானவைதான். தொலைவில் இருந்து பார்த்தால் ஒரு தோற்ற மயக்கம் தெரியும். தும்பிக்கை மட்டுமே யானையை வேறுபடுத்திக் காட்டும். இந்த கோணத்தை அடிப்படையாக வைத்து யானைக் கூட்டத்தில் கலந்துவிட்ட காண்டாமிருகத்தை 3 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடபடுகிறது. அப்படி கண்டுபிடித்தால், ஆப்டிகல் இல்யூஷனில் அதிசயம்தான். ஏனென்றால், மிகவும் குறுகிய நேரத்தில் கண்டுபிடிப்பது அவ்வளவு எளிதல்ல.
நீங்கள் இந்நேரம் இந்தப் படத்தில் யானைக் கூட்டத்தில் கலந்துவிட்ட காண்டாமிருகம் எங்கே இருக்கிறது என கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷனில் விடை கண்டுபிடிப்பதில் இது அதிசயம்தான். உங்களுக்கு பாராட்டுகள்.
ஒருவேளை உங்களால் இன்னும் இந்த படத்தில் காண்டாமிருகத்தை அடையாளம் காணமுடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். காண்டாமிருகம் எங்கே இருக்கிறது என ஒரு குறிப்பு தருகிறோம். இடது பக்கம் கவனமாகப் பாருங்கள். காண்டாமிருகத்தைக் காணலாம் .
இப்போது படத்தில் மறைந்திருக்கும் காண்டாமிருகத்தை எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆனாலும், சிலரால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள். சிலர் இந்த படத்தில் காண்டாமிருகம் இல்லை என்று கூறுகிறார்கள். அவர்களுக்காக, காண்டாமிருகம் எங்கே இருக்கிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.