/tamil-ie/media/media_files/uploads/2023/02/Optical-illusion-1-6.jpg)
Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
/tamil-ie/media/media_files/uploads/2023/02/Optical-illusion-1-6-1.jpg)
இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலை அதிக நுண்ணறிவு மிக்க புத்திசாலிகளால் மட்டுமே தீர்க்க முடியும். இந்த விண்டேஜ் படத்தில் உள்ள 2 பூனைகளையும் 16 வினாடிகளில் 1% பேர் மட்டுமே கண்டுபிடித்திருக்கிறார்கள். நீங்களும் 2 பூனைகளைக் கண்டுபிடிக்க ட்ரை பண்ணுங்க. புத்திசாலினு காட்டுங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் என்பது மனதை மயக்கி ஆழமாக கவர்ந்திழுக்கக் கூடியவை. ஒரு பொருளின் அல்லது படத்தின் வடிவத்தை மாற்றிக் காட்டும். படத்தில் உள்ள விஷயங்களை கண்கள் தெளிவாகப் பார்த்து மூளை புரிந்துகொள்வதை சவால் செய்யும்.
இதனால்தன், ஆப்டிகல் இல்யூஷன் உளவியல் பகுப்பாய்வுத் துறையின் ஒரு பகுதி என்பதை ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன. இது நீங்கள் விஷயங்களை எப்படி உணர்கிறீர்கள் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. ஒரு மனிதனின் இயல்பான மூளை ஒவ்வொரு கோணத்திலிருந்தும் வெவ்வேறு உணர்வை உருவாக்கும் விஷயங்களை அல்லது படங்களைப் பார்க்க முடியும். அத்தகைய ஒரு புத்திசாலித்தனமான விளக்கத்தை இந்த விண்டேஜ் படத்தில் காணலாம்.
/tamil-ie/media/media_files/uploads/2023/02/Optical-illusion-2-4.jpg)
இந்த படம் Playbuzz தளத்தில் வெளியாகி உள்ளது. இது ஒரு விண்டேஜ் படம். இந்த படத்தில் ஒரு அறையில் 2 பெண்கள் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். இந்த அறையில் இவர்கள் மட்டுமல்லாமல், 2 பூனைகள் இருக்கிறது. அதில் ஒரு பூனை பார்ப்பவர்கள் அனைவருக்கும் தெளிவாகத் தெரியும். ஆனால், அந்த 2வது பூனை எங்கே என்று நுண்ணறிவு உள்ள புத்திசாலிகளால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். அதிலும், 16 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. ஏனென்றால், அந்த 2வது பூனை இல்யூஷன் செய்யப்பட்டிருக்கிறது. இதுவரை அந்த 2வது பூனையை இந்த சவாலை எதிர்கொண்ட்வர்களில் 1% பேர்களால் மட்டுமே கண்டுபிடிக்க முடிந்துள்ளது. நீங்கள் நுண்ணறிவு உள்ள புத்திசாலி என்று நிரூபிப்பதற்கான நேரம் இது. நீங்களும் அந்த 2வது பூனை எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்க ட்ரை பண்ணுங்க. புத்திசாலினு காட்டுங்கள்.
இந்த விண்டேஜ் படத்தில் 2வது பூனையை 16 நொடிகளில் கண்டுபிடித்துவிட்டீர்களா? கண்டுபிடித்துவிட்டீர்கள் என்றால், 1% நுண்ணறிவு உள்ள புத்திசாலிகளில் நீங்களும் ஒருவர். உங்களுக்கு பாராட்டுகள். ஒருவேளை உங்களால் அந்த 2வது பூனை எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், உங்களுக்காக அந்த பூனை எங்கே இருக்கிறது என்று கூறுகிறோம்.
/tamil-ie/media/media_files/uploads/2023/02/Optical-illusion-3-3.jpg)
இந்த விண்டேஜ் புதிரில், இரண்டு பெண்கள் ஒரு மேசையில் அமர்ந்துள்ளனர், அவர்களின் பூனைகளில் ஒன்று மேலே பார்த்தபடி தரையில் அமர்ந்திருக்கிறாது. மற்றொன்று இல்யூஷன் செய்யப்பட்டிருக்கிறது. அந்த 2வது பூனை மஞ்சள் நிற கவுனில் இருக்கும் பெண்ணின் தொப்பி அல்லது கொண்டையில் அணிந்துள்ள பன்னெட்டைப் பாருங்கள். பூனை இருப்பது தெரியும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.