மாட்டு மந்தையில் மறைந்திருக்கும் ஆடு… 30 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? ஓபன் சேலஞ்ச்!
Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஒரு மாட்டுமந்தையில் ஒரு ஆடு மறைந்திருக்கிறது. அதை 30 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று ஓபன் சேலஞ்ச் விடப்பட்டுள்ளது. நீங்கள் கண்டுபிடிக்க ட்ரை பண்ணி பாருங்க.
Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தை ஒரு சூறாவளியைப் போல தாக்கி வருகிறது. நெட்டிசன்கள் இந்த படத்துல மறைந்திருக்கிற விலங்குகளைக் கண்டுபிடியுங்கள் என்றாலே பரபரப்படைந்து வெறித்தனமாக விடைகளைத் தேடி வருகிறார்கள்.
Advertisment
ஆப்டிகல் இல்யூஷன் ஒரு நெட்டிசன்களுக்கு இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டாக மட்டுமில்லாமல் கண்ணுக்கும் மூளைக்கும் நல்ல பயிற்சி அளிப்பவையாகவும் இருக்கிறது. நீங்களும் படத்தில் மறைந்திருக்கும் விலங்குகளைக் கண்டுபிடித்து பயிற்சி செய்யுங்கள்.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஒரு மாட்டு மந்தையில் ஒரு ஆடு மறைந்திருக்கிறது. அதை 30 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று ஓபன் சேலஞ்ச் விடப்பட்டுள்ளது. நீங்கள் கண்டுபிடிக்க ட்ரை பண்ணி பாருங்க.
ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் மறைந்துள்ள விலங்குகளைக் கண்டுபிடிப்பது என்பது வைக்கோல் போரில் ஊசியைத் தொலைத்துவிட்டுத் தேடுகிற கதைதான். இன்னும் சரியாக சொல்வதென்றால் தோள் மேலே ஆட்டுக்குட்டியை வைத்துக்கொண்டு ஊரெல்லாம் தேடுவது போல இருக்கும். ஆனால், கொஞ்சம் ஸ்மார்ட்டாக யோடித்து தேடினால் எளிதாக கண்டுபிடித்துவிடலாம்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் லேட்டஸ்ட் நியூஸ் பிரஷர்ஸ்லைவ் தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் நிறைய மாடுகள் ஒரு மந்தையாக நிற்கிறது. மாட்டு மந்தைகளுக்கு இடையே, ஒரு ஆடு மறைந்திருக்கிறது. மாடுகளுக்கு இடையே இருக்கும் அந்த ஆடு சிக்கி காயப்படுவதற்கு முன்னால், 30 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று ஓபன் சேலஞ்ச் விடப்பட்டுள்ளது. இதில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆடு எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்க முயற்சி செய்யலாம். நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.
இந்த படத்தில் மாட்டு மந்தையில் சிக்கியிருக்கும் ஆடு எங்கே இருக்கிறது என்று 30 நொடிகளுக்குள் கண்டுபிடித்துவிட்டிருந்தால், உங்களுக்கு பாராட்டுகள். கண்டுபிடிக்கவில்லை என்றால், ஆடு எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”