Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் பார்ப்பவர்களை எல்லாம் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருவதால் நெட்டிசன்கள் படையெடுத்து வருகிறார்கள். இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஆமைகளுக்கு மத்தியில் மறைந்திருக்கும் பாம்பை கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான் உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால். கண்டுபிடித்தால் உண்மையிலேயே பெரிய சாதனைதான். ஏனென்றால், பாம்பைக் கண்டுபிடிப்பது என்பது அவ்வளவு எளிதல்ல.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒரு சூறாவளி போல இணையத்தை தாக்கி வருகிறது. நெட்டிசன்கள் ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் புதிர்களின் சுவாரசியத்தில் திகைத்துப் போகிறார்கள்.
உண்மையில் ஆப்டிகல் இல்யூஷன் படங்களுக்கு விடை தேடுவது என்பது வைக்கோல் போரில் ஊசியைத் தேடுவது போன்றது. இன்னும் சரியாக சொல்ல வேண்டுமானால், பப்பாளி விதைகளுக்கு இடையே மிளகைத் தேடுவதைப் போன்றது. ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் புதிர் மேலோட்டமாகப் பார்ப்பதற்கு எளிதாக இருக்கும். ஆனால், விடையைத் தேடத் தொடங்கினால் விழி பிதுங்கிவிடும். அந்த அளவுக்கு கடினமாக இருக்கும். முடிவில்லாத குழப்பத்தில் சிக்கி சோர்ந்து போகும்போது விடையை தெரியவந்தால் ஆச்சரியத்தில் அசந்துபோவீர்கள்.

அந்த வகையில் இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஆமைகளுக்கு மத்தியில் ஒரு பாம்பு மறைந்திருக்கிறது. அந்த பாம்பை கழுகுக் கண் கொண்டு தேடிக் கண்டுபிடியுங்கள். ஏனென்றால், ஆமைகளின் தலைகளும் பாம்பின் தலைகளும் ஒரே மாதிரியாக வரையப்பட்டிருக்கிறது.
இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் வைரலாகி நெட்டிசன்களை ஈர்த்து வரும் இந்த படத்தை, ஆப்டிகல் இல்யூஷன் படங்களை வரைவதில் புகழ்பெற்ற ஹங்கேரிய ஓவியர் ஜெர்ஜ்லி டுடாஸ் டுடால்ஃப் வரைந்துள்ளார். அவர் நிறைய ஆமைகளை வரைந்து அதற்கு மத்தியில் ஆமைகளின் தலைகளைப் போலவே ஒரு பாம்பை வரைந்து மறைத்து வைத்துள்ளார். அந்த பாம்பை கண்டுபிடிக்க சவால் விடுத்துள்ளார். பலரும் பாம்பைக் கண்டுபிடிக்க முடியாமல் சோர்ந்து படுத்துவிட்டார்கள். அதனால், ஆமைகளுக்கு மத்தியில் பாம்பைக் கண்டுபிடித்தால் நிஜமாகவே அது பெரிய சாதனைதான்.

ஆமைகளுக்கு நடுவே பாம்பைக் கண்டுபிடித்துவிட்டால் பாராட்டுகள். இல்லையென்றால், கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். பாம்பு இந்த படத்தில் இடது பக்கத்தில் இருக்கிறது. பாம்புவின் நாக்கு வெளியே தெரியும்.
இப்போது எளிதாக பாம்பை கண்டுபிடிக்கலாம். இந்த படத்தை நன்றாக உற்று கவனித்துப் பாருங்கள் பாம்பைக் கண்டுபிடியுங்கள்.
இந்நேரம் பாம்பைக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள். கண்டுபிடிக்கவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். பாம்பு எங்கே இருக்கிறது என்று காட்டுகிறோம். நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“