Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மனதைக் குழப்பும் படங்கள். ஆப்டிகல் இல்யூஷன் உங்கள் பார்வைக்கு சவால் விடும், உங்கள் கூர்ந்து நோக்கும் திறனை சோதிக்கும். ஆனாலும், படத்தில் மறைந்திருக்கும் விலங்குகளை கண்டுபிடிப்பது என்பது ஒரு புத்திசாலித் தனமான விளையாட்டு விளையாடிப் பாருங்கள்.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஆமைக் கூட்டங்களுக்கு இடையே மறைந்திருக்கும் பாம்பு எங்கே இருக்கிறது என 10 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள் புத்திசாலி. ஏனென்றால், அது அவ்வளவு எளிதல்ல.
சமீபத்தில் ஹங்கேரிய கிராஃபிக் வடிவமைப்பு கலைஞரான ஜெர்ஜ்லி டுடாஸ் டுடால்ஃப் வரைந்து தனது பிளாகில் வெளியிட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் படம் சமூக ஊடகங்களில் நெட்டிசன்களை ஈர்த்து வைரலாகி வருகிறது. அப்படி என்ன இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் இருக்கிறது என்று கேட்கிறீர்களா? இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஆமைக் கூட்டத்தில் மறைந்திருக்கும் பாம்பை 10 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள்தான் புத்திசாலி.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் உங்களின் கூர்ந்து நோக்கும் திறனைச் சோதிக்க ஒரு எளிய வழி. படத்தில் உள்ள பாம்பைக் கண்டுபிடிக்க முடியுமா? கூர்மையான பார்வை கொண்ட நபர்கள் சில நொடிகளில் பாம்பை கண்டுபிடித்து விடுவார்கள். இந்த சவாலைத் தீர்ப்பதற்கு ஒரே வழி படத்தை கவனமாக கூர்ந்து அலசிப் பார்க்க வேண்டும்.
இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஆமைகளுக்கு இடையே மறைந்திருக்கும் பாம்பைக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்கள் அப்படி கண்டுபிடித்துவிட்டிருந்தால் ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் புத்திசாலிதான். உங்களுக்கு பாராட்டுகள், வாழ்த்துகள்.
ஒருவேளை உங்களால் இந்த படத்தில் ஆமைகளுக்கு இடையே மறைந்திருக்கும் பாம்பைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். பாம்பு எங்கே இருக்கிறது என்று ஒரு குறிப்பு தருகிறோம். படத்தின் கீழ் இடதுபுறம் பார்க்கவும். நீங்கள் உற்று நோக்கினால், ஒரு ஆமையின் தலை சற்று வித்தியாசமாக இருப்பதை நீங்கள் கவனிக்கலாம். அது ஒரு ஆமையின் நாக்கை மற்றவற்றிலிருந்து வேறுபடுத்திக் காட்டும். வெளியே நீண்டு இருக்கும் நாக்கைப் பாருங்கள்.
இப்போது பாம்பை எளிதாகக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஒருவேளை நீங்கள் இன்னும் ஆமைக் கூட்டத்தில் மறைந்திருக்கும் பாம்பை கண்டுபிடிக்க வில்லை என்றால் கவலைப்படாதீர்கள். பாம்பு எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.