Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் விடுக்கும் சவால்கள் மிகவும் சுவாரசியமான ஒரு பொழுதுபோக்கு விளையாட்டாக மாறுவதைப் பார்க்க வேண்டுமா? இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலை ஏற்று விளையாடிப் பாருங்கள். த்ரில்லிங், குழப்பம், ஆச்சரியம், அதிசயம் என கலவையான அனுபவத்தைப் பெறுவீர்கள்.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், காபி தோட்டத்தில் உலவும் பாம்பை 6 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள் பலே கில்லாடி. ஏனென்றால், அது அவ்வளவு சுலபமல்ல.
ஆப்டிகல் இல்யூஷன் மேலோட்டமாகப் பார்த்தால் ஒரு இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டு. ஆனால், இதிலும் கூட ஒரு தத்துவம் இருக்கிறது. எப்படி? அது என்ன தத்துவம் என்கிறீர்களா?
“கண்ணை நம்பாதே, உன்னை ஏமாற்றும்
நீ காணும் தோற்றம், உண்மை இல்லாதது
அறிவை நீ நம்பு, உள்ளம் தெளிவாகும்
அடையாளம் காட்டும், பொய்யே சொல்லாதது” கவிஞர் மருதகாசி எழுதி எம்.ஜி.ஆர் நடித்த நினைத்ததை முடிப்பவன் படத்தில் இடம்பெற்ற இந்த தத்துவப் பாடல் வாழ்க்கைக்கு மட்டுமல்ல. ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் சவாலுக்கும் பொருந்தும். ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் விலங்கை எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம் என்று தேடுவார்கள். ஆனால், கண்டுபிடிக்க முடியாது. மின்னல் போல தோன்றி மறையும். மூளையைக் குழப்பம். ஆனால், விடை தெரியும்போது ஆச்சரியத்தில் அசந்துபோவீர்கள்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில், கண்ணைக் கவரும் ஒரு பசுமையான ஒரு காபி தோட்டம் இருக்கிறது. இந்த காபி தோட்டத்தில் யாருடைய கண்ணுக்கும் தெரியாமல் ஒரு பாம்பு உலவி வருகிறது. காபி தோட்டத்தில் உலவும் பாம்பை 6 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள் பலே கில்லாடி. ஏனென்றால், அது அவ்வளவு சுலபமல்ல. பாம்பை கண்டுபிடியுங்கள். பலே கில்லாடி என்பதைக் காட்டுங்கள்.
நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் காபி தோட்டத்தில் உலவும் பாம்பை கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் பலே கில்லாடிதான். உங்களுக்கு பாராட்டுகள்.
ஆனால், பலரும் இந்த படத்தில் பாம்பு இல்லை என்று அடித்து சத்தியம் செய்கிறார்கள். ஆனால், பலே கில்லாடிகள் எளிதாகக் கண்டுபிடித்துவிட்டதாகக் கூறுகிறார்கள்.
சிலர் பாம்பு எங்கே இருக்கிறது என்று கேட்கிறார்கள். அவர்களுக்காக இந்த படத்தில் பாம்பு எங்கே மறைந்திருக்கிறது என்று கண்டுபிடிக்க ஒரு குறிப்பு தருகிறோம். படத்தில் பெரிய காபி இலைகளில் கவனமாகப் பாருங்கள். பாம்பு கண்ணில் படலாம்.
இப்போது நீங்கள் பாம்பை கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நிஜமாவே நீங்கள் பலே கில்லாடிதான். இன்னும் கண்டுபிடிக்காதவர்களுக்கு பாம்பு எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.