Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தையும் சமூக வலைதளங்களையும் கலக்கி வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சமீப காலமாக இணையத்தில் தினமும் ஆயிரக் கணக்கில் வெளியாகி வருகிறது. அவை மிகப் பெரிய ராட்ச காந்தம் போல லட்சக் கணக்கான நெட்டிசன்களை ஈர்த்து வைரலாகி வருகிறது.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் புடலங்காய் பந்தலில் உலவும் பாம்பை 11 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்க பலே கில்லாடி. நெட்டிசன்கள் பாம்பை வெறித்தனமாகத் தேடுகிறார்கள். உங்களால் கண்டுபிடிக்க முடியுமா? கண்டுபிடிச்சா நீங்க பலே கில்லாடிதான்.
ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு இணையப் பொழுது போக்கு விளையாட்டு மட்டுமல்ல அதில் வாழ்க்கைத் தத்துவமும் அடங்கி இருக்கிறது. எப்படி என்று கேட்கிறீர்களா?
“கண்ணை நம்பாதே, உன்னை ஏமாற்றும்
நீ காணும் தோற்றம், உண்மை இல்லாதது
அறிவை நீ நம்பு, உள்ளம் தெளிவாகும்
அடையாளம் காட்டும், பொய்யே சொல்லாதது” என்ற கவிஞர் மருதகாசியின் பாடல் வரிகள் எம்.ஜி.ஆர் நடித்த நினைத்ததை முடிப்பவன் படத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த தத்துவப் பாடல் வாழ்க்கைக்கு மட்டுமல்ல, ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் சவாலுக்கும் பொருந்தும்.
ஆப்டிகல் இல்யூஷனில் இந்த வகையான சவால்கள், காகிதப் பூக்களுக்கு இடையே இயற்கையான பூவைக் கண்டுபிடிப்பது போன்றது. உண்மைகளுக்கு இடையே போலியையும் போலிகளுக்கு இடையே உண்மையையும் கண்டுபிடிப்பது போன்றது. அதற்கு கொஞ்சம் புத்திசாலித்தனம் தேவை அவ்வளவுதான்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் பாகற்காய் பந்தலில் ஒரு பச்சைப் பாம்பு பவனி வருகிறது. அந்த பாம்பு எங்கெ இருக்கிறது என 10 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்களுக்கு ஒரு ஓபன் சேலஞ்ச் விடப்படுகிறது. நெட்டிசன்கள் பாம்பை வெறித்தனமாகத் தேடிக்கொண்டிருக்கிறார்கள். உங்களால் கண்டுபிடிக்க முடியுமா என்று ட்ரை பண்ணி பாருங்கள். அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் கிங் .
நீங்கள் இந்நேரம் இந்தப் படத்தில் பாம்பை கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷனில் விடை கண்டுபிடிப்பதில் நீங்கள்தான் கிங் . உங்களுக்கு பாராட்டுகள்.
ஒருவேளை உங்களால் இன்னும் இந்த படத்தில் உள்ள பாம்பை அடையாளம் காணமுடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். பாம்பு எங்கே இருக்கிறது என ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தின் கீழ் பகுதியில் கவனமாகப் பாருங்கள். பாம்பை கண்டுபிடித்துவிடலாம்.
இப்போது படத்தில் மறைந்திருக்கும் பாம்பை எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆனாலும், சிலரால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள். அவர்களுக்காக, பாம்பு எங்கே இருக்கிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.