Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தையும் சமூக வலைதளங்களையும் கலக்கி வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சமீப காலமாக இணையத்தில் தினமும் நூற்றுக் கணக்கில் வெளியாகி வருகிறது. அவை மிகப் பெரிய ராட்ச காந்தம் போல லட்சக் கணக்கான நெட்டிசன்களை ஈர்த்து வைரலாகி வருகிறது.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் வீட்டுத் தோட்டத்தில் மறைந்திருக்கும் மிகப் பெரிய பாம்பு எங்கே இருக்கிறது என 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. கண்டுபிடித்தால் நீங்கள் செம ஷார்ப் பாஸ்.
ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு இணையப் பொழுது போக்கு விளையாட்டு மட்டுமல்ல அதில் வாழ்க்கைத் தத்துவமும் அடங்கி இருக்கிறது. எப்படி என்று கேட்கிறீர்களா?
“கண்ணை நம்பாதே, உன்னை ஏமாற்றும்
நீ காணும் தோற்றம், உண்மை இல்லாதது
அறிவை நீ நம்பு, உள்ளம் தெளிவாகும்
அடையாளம் காட்டும், பொய்யே சொல்லாதது” என்ற கவிஞர் மருதகாசியின் பாடல் வரிகள் எம்.ஜி.ஆர் நடித்த நினைத்ததை முடிப்பவன் படத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த தத்துவப் பாடல் வாழ்க்கைக்கு மட்டுமல்ல, ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் சவாலுக்கும் பொருந்தும்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் Coast Snake Catchers தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் வீட்டுத் தோட்டத்தில் ஒரு மிகப் பெரிய பாம்பு மறைந்திருக்கிறது. ஆனால், அந்த பாம்பு எங்கே இருக்கிறது என மேலோட்டமாக பார்க்க்கும் எவருக்கும் தெரியாது. மிகவும் கூர்மையாகப் பார்க்கக்கூடியவர்களுக்கு மட்டுமே தெரியும். அதனால், தோட்டத்தில் மறைந்திருக்கும் பாம்பு எங்கெ இருக்கிறது என 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள் செம ஷார்ப் பாஸ்.
பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள். ஆனால், இங்கே நெட்டிசன்கள் வெறித்தனமாக பாம்பைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள். நீங்களும் தேடிப்பாருங்கள். நீங்கள் செம ஷார்ப் என்பதை நிரூபியுங்கள்.
நீங்கள் இந்நேரம் இந்தப் படத்தில் தோட்டத்தில் மறைந்திருக்கும் பெரிய பாம்பைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷனில் விடை கண்டுபிடிப்பதில் நீங்கள் செம ஷார்ப் பாஸ். உங்களுக்கு பாராட்டுகள்.
ஒருவேளை உங்களால் இன்னும் இந்த படத்தில் உள்ள பாம்பை அடையாளம் காணமுடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். பாம்பு எங்கே இருக்கிறது என ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தில் செடி கொடிகளில் கவனமாகப் பாருங்கள். பாம்பை பட்டென பிடித்துவிடலாம்.
இப்போது படத்தில் மறைந்திருக்கும் பாம்பை எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆனாலும், சிலரால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள். அவர்களுக்காக, பாம்பு எங்கே இருக்கிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.