Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் என்பது உங்கள் பார்வைத் திறனுக்கான சவால் மட்டுமல்ல, உங்கள் புத்திக் கூர்மைக்கான பயிற்சியும்கூட. பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள். ஆனால், நீங்கள் இந்த படத்தில் கண்டுபிடிக்கப் போவது ஒரு பாம்புதான்.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் தேயிலைத் தோட்டத்தில் மேயும் பச்சைப் பாம்பை 15 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படிக் கண்டுபிடித்தால் உங்களுக்கு கூர்மையான கழுகுப்பார்வை.
ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் சவால் இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் நெட்டிசன்களுக்கு மிகவும் ஒரு பிடித்தமான சவாலாக உள்ளது. சிங்கம், புலி, கரடி, யானை, பாம்பைக் கண்டுபிடியுங்கள் என்றால் நெட்டிசன்கள் வெறித்தனமாகத் தேடுகிறார்கள். அந்த அளவுக்கு ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சுவாரசியமானது. இந்த இல்யூஷன் படங்கள் ஐக்யூ டெஸ்ட், ஆளுமையை குறிப்பிடுவதற்கு, உளவியல் டெஸ்ட், இணையப் புதிர் என பல வகைகளாக உள்ளன. அதிலும், படத்தில் மறைந்திருக்கும் விலங்குகளைக் கண்டுபிடிக்கும் சவால்கள் மிகவும் சுவாரசியமானவை. இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலும் மிகவும் சுவாரசியமானது.
இந்த படம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் பார்க்கும் இடமெல்லாம் தேயிலைத் தோட்டத்தின் பச்சை. தூரத்தில் தேயிலை பறித்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், அதே தேயிலைத் தோட்டத்தில், ஒரு பச்சை பாம்பு மேய்ந்துகொண்டிருகிறது. அந்த பச்சை பாம்பு எங்கே மறைந்திருக்கிறது என 15 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் உங்களுக்கு கூர்மையான கழுகுப்பார்வை. உண்மையில் இது உங்கள் பார்வைத் திறனுக்கான சவால்.
நீங்கள் இந்நேரம் இந்தப் படத்தில் தேயிலைத் தோட்டத்தில் மேயும் பச்சைப் பாம்பைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷனில் விடை கண்டுபிடிப்பதில் உங்களுக்கு கூர்மையான கழுகுப்பார்வை. உங்களுக்கு பாராட்டுகள்.
ஒருவேளை உங்களால் இன்னும் இந்த படத்தில் உள்ள பாம்பை அடையாளம் காணமுடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். பாம்பு எங்கே இருக்கிறது என ஒரு குறிப்பு தருகிறோம். படத்தின் மூலைகளில் கவனமாகப் பாருங்கள். பாம்பை பட்டென பிடித்துவிடலாம்.
இப்போது படத்தில் மறைந்திருக்கும் பாம்பை எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆனாலும், சிலரால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள். அவர்களுக்காக, பாம்பு எங்கே இருக்கிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.