Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் சவால்கள் இணையத்தையே கலக்கி வருகிறது. ஒரு ராட்சத காந்தம் போல நெட்டிசன்களை ஈர்த்து வருகிறது. லட்சக் கணக்கான நெட்டிசன்கள் ஆப்டிகல் இல்யூஷன் படங்களை நோக்கி படையெடுத்து வருகிறார்கள்.

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் தோட்டத்தில் புகுந்த பாம்பு எங்கே மறைந்திருக்கிறது என 8 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று ஓபன் சேலஞ்ச் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டில இல்யூஷனில் நீங்கதான் ராஜா.
ஆப்டிகல் இல்யூஷன் சவாலுக்கு பொருத்தமான ஒரு பழமொழி சொல்ல வேண்டும் என்றால், அது “கண்ணால் காண்பது பொய் காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய்” என்பதுதான் பொருத்தமாக இருக்கும். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படமும் அதையே வழிமொழிகிறது.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் டிக்டாக்கில் TikTok/@alexthecrittercatcher என்ற ஐடியில் உள்ளவர் வெளியிட்டுள்ளார். இந்த படத்தில் தோட்டத்தில் ஒரு பாம்பு குந்துவிட்டது. அந்த பாம்பு எங்கே இருக்கிறது என்று 8 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று ஓபன் சேலஞ்ச் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால், ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் ராஜா. ஏனென்றால், பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள். ஆனால், நீங்கள் இங்கே பாம்பை கண்டுபிடிக்கப்போகிறீர்கள்.
நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் தோட்டத்தில் மறைந்திருக்கும் பாம்பை கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள்தான் ராஜா. உங்களுக்கு பாராட்டுகள்.
ஒருவேளை உங்களால் இன்னும் இந்த படத்தில் மறைந்திருக்கும் பாம்பை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். ஏனென்றால், நிறைய பேர் இந்த படத்தில் பாம்பு இல்லை என்று கூறுகிறார்கள். பாம்பை கண்டுபிடிக்க உங்களுக்கு ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தில் செடிகளுக்கு இடையே கவனமாக பாருங்கள் பாம்பை பட்டென பிடித்து விடலாம்.
இப்போது இந்த படத்தில் உள்ள தோட்டத்தில் புகுந்த பாம்பை எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆனாலும், சிலரால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள். அவர்களுக்காக, பாம்பு எங்கே இருக்கிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“