Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் விடுக்கும் சவால்கள் உங்களை கூர்மையாகப் பார்க்க வலியுறுத்துகிறது. பொதுவாக மனிதர்கள் எல்லாக் காட்சிகளையும் கூர்மையாகப் பார்ப்பது இல்லை. தேவை ஏற்பட்டால் மட்டுமே கூர்மையாகப் பார்க்கிறார்கள். ஆனால், இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உங்களை எல்லாக் காட்சிகளையும் கூர்மையாகப் பார்க்கப் பழக்கப்படுத்திவிடும்.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், புல்லில் மறைந்திருக்கும் ஆபத்தான விஷப் பாம்பை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கதான் கில்லி. ஏனென்றால், அது அவ்வளவு எளிதல்ல.
ஆப்டிகல் இல்யூஷன் படங்களை வெறுமனே ஆப்டிகல் இல்யூஷன் சவால்களாக மட்டுமே பார்த்தால் அவை இணையப் புதிர்களாக மட்டும்தான் தெரியும். ஆனால், கூர்மையாகப் பார்த்தால் எல்லாவற்றுக்குள்ளும் ஒரு தீவிரமான விஷயம் இருப்பதை புரிந்துகொள்ள முடியும். இது ஆப்டிகல் இல்யூஷனுக்கு மட்டுமல்ல, எளிமையான எந்த விஷயத்தையும் கொஞ்சம் முயன்றால் அதில் உள்ள தீவிரத்தன்மையைப் புரிந்துகொள்ள முடியும். எளிமையான எல்லா விஷயங்களிலும் தீவிரமான விஷயங்கள் இருக்கத்தான் செய்யும்.
“கண்ணை நம்பாதே, உன்னை ஏமாற்றும்
நீ காணும் தோற்றம், உண்மை இல்லாதது
அறிவை நீ நம்பு, உள்ளம் தெளிவாகும்
அடையாளம் காட்டும், பொய்யே சொல்லாதது” என்ற பாடல் வரிகள் எம்.ஜி.ஆர் நடித்த நினைத்ததை முடிப்பவன் படத்திற்காக கவிஞர் மருதகாசி எழுதியது. இந்த தத்துவப் பாடல், வாழ்க்கைக்கு மட்டுமல்ல, ஆப்டிகல் இல்யூஷனுக்கும் பொருந்தும். எதுவுமே இல்லை என்பது போலத்தான் தோன்றும். ஆனால், புத்திசாலித்தனமாகத் தேடினால், கண்டுபிடிக்கலாம்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் Facebook page - The Snake Hunter. Courtesy: Mail Online தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் புற்கள், சருகுகள் இடையே ஒரு ஆபத்தான விஷப் பாம்பு மறைந்திருக்கிறது. அந்த பாம்பு எங்கே மறைந்திருக்கிறது என 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படிக் கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கதான் கில்லி. ஏனென்றால், எளிதான இந்த சவாலை, மிகவும் மிகவும் குறைவான நேரத்தில் கண்டுபிடிப்பது எளிதல்ல.
நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் ஆபத்தான விஷப் பாம்பை கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் கில்லிதான். உங்களுக்கு பாராட்டுகள்.
ஆனால், பலரும் இந்த படத்தில் பாம்பு இல்லை என்று கூறுகிறார்கள். ஆனால், கில்லி என்று அழைக்கப்படுபவர்கள் எளிதாகக் கண்டுபிடித்துவிட்டதாகக் கூறுகிறார்கள்.
சிலர் பாம்பு எங்கே இருக்கிறது என்று கேட்கிறார்கள். அவர்களுக்காக இந்த படத்தில் பாம்பு எங்கே மறைந்திருக்கிறது என்று கண்டுபிடிக்க ஒரு குறிப்பு இடது பக்கம் கீழ் பகுதியில் கவனமாகப் பாருங்கள், படத்தை ஜூம் செய்து பாருங்கள், பாம்பு கண்ணில் படலாம்.
இப்போது நீங்கள் பாம்பை எளிதாகக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நிஜமாவே நீங்கள் கில்லிதான். இன்னும் கண்டுபிடிக்காதவர்களுக்கு பாம்பு எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.