Advertisment

உங்கள் பார்வைத் திறனுக்கு சவால்… சருகுகளில் மறைந்திருக்கும் பாம்பு… 5 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க கிரேட்!

Optical illusion: இந்த படத்தில் காய்ந்த இலை சருகுகளுக்கு இடையே ஒரு பாம்பு மறைந்திருக்கிறது. அந்த பாம்பை 5 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க கிரேட். ஏனென்றால், பாம்பை கண்டுபிடிப்பது அவ்வளவு எளிதல்ல.

author-image
WebDesk
New Update
Optical Illusion, Optical Illusion Pictures, Optical Illusion Viral Picture, Optical Illusion Animal Picture, Optical Illusion Viral Photos, Optical Illusion Latest, about optical illusion,Optical Illusion photos, Optical Illusion pictures, Optical Illusion images

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் விடுக்கும் சவாலில் உள்ள சுவாரசியத்தில் திளைக்காதவர்களே இல்லை. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லா வயது நெட்டிசன்களும் ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் மறைந்திருக்கும் விலங்களை வெறித்தனமாகத் தேடிக் கண்டுபிடிக்கிறார்கள்.

Advertisment
publive-image

இந்த படத்தில் காய்ந்த இலை சருகுகளுக்கு இடையே ஒரு பாம்பு மறைந்திருக்கிறது. அந்த பாம்பை 5 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க கிரேட். ஏனென்றால், பாம்பை கண்டுபிடிப்பது அவ்வளவு எளிதல்ல.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இன்று நேற்று தோன்றியது அல்ல. அது ஒரு புதிராக சவாலாக விளையாடப்பட்டிருக்கும் என்பது உறுதியாக சொல்ல முடியாவிட்டாலும், ஆப்டிகல் இல்யூஷன் ஏற்கெனவே இருந்திருக்கிறது. ஆப்டிகல் இல்யூஷன் கி.மு 3,500 ஆண்டுகளுக்கு முன் பண்டைய கிரேக்கத்தில் இருந்ததாக தொல்லியல் ஆதாரங்கள் இருப்பதாகக் கூறுகிறார்கள். கி.மு 4ம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க தத்துவ அறிஞர் அரிஸ்டாடில் ஆப்டிகல் இல்யூஷன் என்கிற தோற்ற மயக்கத்தைக் குறிப்பிடுகிறார். இந்தியாவில் உள்ள பழங்கால சிற்பங்கள், ஓவியங்கள் பலவும் ஆப்டிகல் இல்யூஷன் கோணத்தில் பார்க்கலாம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் இணைய யுகத்தில் நெட்டிசன்கள் விரும்பி விளையாடும் சவாலாக உள்ளது.

publive-image

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் போர்ட்பாண்டா தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் காய்ந்த இலை, தழை, சருகுகள் உள்ளது. இந்த காய்ந்த சருகுகளுக்கு இடையே ஒரு பாம்பு மறைந்திருக்கிறது. அந்த பாம்பு எங்கே மறைந்திருக்கிறது என்று கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால், ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள் நிஜமாவே கிரேட்தான்.

நீங்கள் இந்நேரம், இந்த படத்தில் பாம்பு எங்கே மறைந்திருக்கிறது என்று கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள் நிஜமாவே செம ஷார்ப்தான் பாஸ். உங்களுக்கு பாராட்டுகள்.

publive-image

ஒருவேளை உங்களால் இன்னும் பாம்பை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். பாம்பு எங்கே இருக்கிறார் என்று ஒரு குறிப்பு தருகிறோம். படத்தின் நடுவில் ஒருமுறை உற்றுப் பார்த்து தேடுங்கள்.

இப்போது பாம்பை எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஒருவேளை நீங்கள் இன்னும் பாம்பை அடையாளம் காண முடியவில்லை என்றால் பாம்பு எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம்.

publive-image

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Viral News Viral Photo Viral
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment