Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டு மட்டுமல்ல, அது மிகவும் சுவாரசியமானது. ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தோற்ற மயக்கம். அது ஒரு மாயாஜாலம், அது ஒரு தந்திரம். உங்கள் கண்களை ஏமாற்றும் கண்கட்டி வித்தை.
சுவாரசியத்துக்கு பஞ்சமே இல்லாத விளையாட்டு, திகட்டாத த்ரில்லிங் கொண்ட விளையாட்டு, அதனால்தான், லட்சக் கணக்கான நெட்டிசன்கள் ஆப்டிகல் இல்யூஷன் படங்களை நோக்கி படையெடுத்து வருகிறார்கள். சளைக்காமல் ஆப்டிகல் இல்யூஷன் மறைந்துள்ள விலங்குகளை வெறித்தனமாகத் தேடுகிறார்கள்.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உள்ள ஒரு தோட்டத்தில் ஒரு பாம்பு புகுந்திருக்கிறது. அந்த பாம்பு எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அதிலும் 10 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்கள் மாஸ்டர்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தில் ஒவ்வொரு நாளும் உச்சங்களை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. நெட்டிசன்களின் அடிக்ஷனாகி இருக்கிறது. ஆனால், இது ஒரு நல்ல அடிக்ஷன். ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் மறைந்திருக்கும் விலங்குகளைக் கண்டுபிடியுங்கள் என்றாலே உடனே பரபரப்பாகி வெறித்தனமாகத் தேடத் தொடங்கிவிடுகிறார்கள்.
அந்த வகையில், ஸ்னேக் கேட்சர்ஸ் பிர்ஸ்பேன் & கோல்ட் கோஸ்ட் (Snake Catchers Brisbane & Gold Coast) தளத்தில் வெளியாகி உள்ள இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் நெட்டிசன்களை ஒரு ராட்சத காந்தம் போல ஈர்த்து வருகிறது. இந்த படத்தில் உள்ள தோட்டத்தில் எப்படியோ ஒரு பாம்பு புகுந்துவிட்டது. அந்த பாம்பு வெளிப்படையாக கண்ணுக்கு தெரியாத அளவில் மறைந்திருக்கிறது. படத்தில் பாம்பு எங்கே இருக்கிறது என்று 10 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால், ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் புதிர்களில் விடை கண்டுபிடிப்பதில் நீங்கள் மாஸ்டர்தான். ஏனென்றால், இதில் பாம்பைக் கண்டுபிடிப்பது அவ்வளவு சுலபமல்ல.
இந்நேரம், நீங்கள் இந்த படத்தில் உள்ள தோட்டத்தில் புகுந்து மறைந்திருக்கும் பாம்பை கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்கள் நிஜமாவே ஆப்டிகல் இல்யூஷனில் மாஸ்டர்தான். உங்களுக்கு பாராட்டுகள்.
ஒருவேளை நீங்கள் இன்னும் பாம்பை கண்டுபிடிக்கவில்லை என்றால், உங்களுக்கு உதவி செய்ய பாம்பு எங்கே இருக்கிறது என்று ஒரு குறிப்பு தருகிறோம். கூரை ஏறிவிட்டது பாம்பு, இப்போது படத்தை மீண்டும் ஒருமுறை நன்றாக உற்றுப் பார்த்து கண்டுபிடியுங்கள்.
நீங்கள் இன்னும் தோட்டத்தில் புகுந்த பாம்பை கண்டுபிடிக்கவில்லை என்றால், அந்த பாம்பு எங்கே இருக்கிறது என வட்டமிட்டு காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு சுவாரசியமான இணையப் பொழுதுபோக்கு விளையாட்டு மட்டுமல்ல. அது உங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கிற விளையாட்டு. அதனால், தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் வெளியாகியுள்ள ஆப்டிகல் இல்யூஷன் சவால்களை ஏற்று பயிற்சி செய்யுங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.