Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மிகவும் சுவாரசியமானவை அதே நேரத்தில் வேடிக்கையானதும்கூட. ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் மறைந்திருக்கும் விலங்குகளைக் கண்டுபிடிப்பது என்பது வைக்கோல் போரில் ஊசியைத் தொலைத்துவிட்டு தேடுவதைப் போன்றது.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் பாம்பை 11 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைத் திறனுக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் உங்களுக்கு கூர்மையான கழுகுப் பார்வை. நீங்கள் முயற்சி செய்து பாருங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மேலோட்டமாகப் பார்ப்பதற்கு ஏதோ ஒரு இணையப் பொழுதுபோக்கு விளையாட்டாகத்தான் தெரியும். ஆனால், இது உங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் நல்ல பயிற்சி அளிக்கும். உங்கள் மன அழுத்தங்களில் இருந்து திசை திருப்பி ரிலாக்ஸாக இருக்க வைக்கும். அதனால்தான், நெட்டிசன்கள் இணையத்தில் ஆப்டிகல் இல்யூஷன் படங்களை நோக்கி படையெடுத்து வருகிறார்கள்.
உலகம் முழுவதும் நாள்தோறும் பல நூறு ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது. எல்லா ஆப்டிகல் இல்யூஷன் படங்களும் அதன் அளவில் சவாலானதுதான்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் Sunshine Coast Snake Catchers 24/7 முகநூல் பக்கத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் ஒரு ஷெல்டரில் கூழாங்கற்கள் இடையே ஒரு பாம்பு மறைந்திருக்கிறது. அந்த பாம்பு எங்கே மறைந்திருக்கிறது என சாதாரணமாகப் பார்த்தால் தெரியாது. அதனால், இந்த படத்தில் மறைந்திருக்கும் பாம்பை 11 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைத் திறனுக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் உங்களுக்கு கூர்மையான கழுகுப் பார்வை. நீங்கள் முயற்சி செய்து பாருங்கள். இந்த புதிர் மிகவும் சவாலானது.
நீங்கள் இந்நேரம் இந்த படத்தில் உள்ள பாம்பை கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களில் விடை தேடிக் கண்டுபிடிப்பதில் நிஜமாவே உங்களுக்கு கழுகுப் பார்வைதான். உங்களுக்கு எங்கள் பாராட்டுகள்.
ஒருவேளை நீங்கள் இந்த படத்தில் பாம்பைக் கண்டுபிடிக்கவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். முதலில், பாம்பைக் கூர்மையான கழுகுப் பார்வையுடன் தேடுங்கள். படத்தை ஜூம் செய்து நெருக்கமாகப் பாருங்கள். இந்த படத்தின் மேல் பகுதியில் பாம்பு தெரியும் பாருங்கள்.
இன்னும் உங்களால் பாம்பைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் பரவாயில்லை. பாம்பு எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள். கண்ணுக்கும் மூளைக்கும் நல்ல பயிற்சியாக இருக்கும். ரிலாக்ஸாக இருக்க வைக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.