Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் என்பது உங்கள் கண்களை ஏமாற்றும் ஒரு தந்திரம், உங்கள் தேடும் திறனை, வேகத்தை அதிகரிக்கும் பயிற்சி. உங்கள் IQ திறனை சோதிப்பதற்கான ஒரு வழி. அதனால்தான், ஆயிரக் கணக்கான நெட்டிசன்கள் ஆப்டிகல் இல்யூஷன் படங்களை நோக்கி படையெடுத்து வருகிறார்கள். நீங்களும் ட்ரை பண்ணி பாருங்கள்.

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் சூரியகாந்தி வயலில் சுற்றி வரும் பாம்பை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கதான் ஜீனியஸ். இது கடுமையான சவால்.
ஆப்டிகல் இல்யூஷன் பாடலுக்கு 100 சதவீதம் பொருந்திப் போகிற ஒரு தமிழ் சினிமா பாடல் உண்டு அது என்ன பாடல் தெரியுமா?
“கண்ணை நம்பாதே, உன்னை ஏமாற்றும்
நீ காணும் தோற்றம், உண்மை இல்லாதது
அறிவை நீ நம்பு, உள்ளம் தெளிவாகும்
அடையாளம் காட்டும், பொய்யே சொல்லாதது” என்ற இந்த பாடல் வரிகள் எம்.ஜி.ஆ நடித்த நினைத்ததை முடிப்பவன் படத்திற்காக கவிஞர் மருதகாசி எழுதியது. உண்மையில் இந்தப் பாடல் வரிகள் எந்த அளவுக்கு வாழ்க்கை தத்துவத்துக்குப் பொருந்திப் போகிறதோ அதே அளவுக்கு ஆப்டிகல் இல்யூஷனுக்கு பொருந்திப் போகிறது பாருங்கள்.

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படம் ரயில் செல்லும் பாதை அருகே சூரியகாந்தி சாகுபடி செய்யப்பட்ட வயலில் படம்பிடிக்கப்பட்டுள்ளது. இந்த சூரியகாந்தி வயலில் ஒரு பாம்பு சுற்றி வருகிறது. அந்த பாம்பு எங்கே இருக்கிறது என 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் ஜீனியஸ். ஏனென்றால், இந்த படத்தில் மறைந்திருக்கும் பாம்பை அவ்வளவு எளிதாகக் கண்டுபிடித்துவிட முடியாது.
நீங்கள் இந்நேரம், இந்த படத்தில் எங்கே பாம்பு இருக்கிறது என கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலில் நிஜமாவே நீங்கள் ஜீனியஸ்தான். உங்களுக்கு பாராட்டுகள்.

இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலை எதிர்கொண்ட நெட்டிசன்கள் பலரும் இந்த படத்தில் பாம்பு இல்லை என்று கூறுகிறார்கள். ஆனால், ஜீனியஸ்கள் கண்டுபிடித்துவிட்டதாகக் கூறுகிறார்கள். பாம்பு எங்கே இருக்கிறது என ஒரு குறிப்பு தருகிறோம். படத்தின் கீழ் பகுதியில் கவனமாகப் பாருங்கள். பாம்பு கண்ணில் படலாம்.
இப்போது மிகவும் எளிதாக பாம்பை கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். இல்லையென்றால், கவலைப்பட வேண்டாம். பாம்பு எங்கே இருக்கிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“