/tamil-ie/media/media_files/uploads/2023/04/snake-1-30.jpg)
ஆப்டிகல் இல்யூஷன்
Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் நெட்டிசன்கள் மத்தியில் ஒவ்வொரு நாளும் விதவிதமான சுவாரசியத்தை அனுபவமாக்கிக் கொண்டிருக்கிறது. இந்த படத்துல மறைந்திருக்கிற விலங்கு, பறவைகளைக் கண்டுபிடியுங்கள் என்றதுமே நெட்டிசன்கள் வெறித்தனமாகத் தேடத் தொடங்கிவிடுகிறார்கள்.
/tamil-ie/media/media_files/uploads/2023/04/snake-2-30.jpg)
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் தக்காளி தோட்டத்தில் மறைந்திருக்கும் பாம்பை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கதான் கிங். இது கடினமான சவால்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் விடுக்கும் சவால்கள் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஒரு ராட்சத காந்தம் போல ஈர்த்து வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மனிதர்கள் பொதுவாக ஒரு காட்சியை எப்படிப் பார்த்து புரிந்துகொள்கிறார்கள் என்பதை அடிப்படையாக வைத்து சவால் விடப்படுகிறது. ஆப்டிகல் பார்ப்பதற்குத்தான் ஒரு தந்திரமாகத் தெரியும், ஒரு கண்கட்டி வித்தை என்று நினைக்கலாம், அது மூளையைக் குழப்பும் பெரும் குழப்பம் என்று நினைக்கலாம், ஆனால், கொஞ்சம் ஸ்மார்ட்டாகத் தேடினால் அது ஒன்னுமே இல்லை. மிகவும் எளிதானப் புதிர்தான்.
/tamil-ie/media/media_files/uploads/2023/04/snake-2-30-1.jpg)
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் உள்ள தக்காளி தோட்டத்தில் ஒரு பாம்பு உலவுகிறது. அந்த பாம்பு எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை. அதனால், இந்த படத்தில் பாம்பு எங்கே மறைந்திருக்கிறது என்று 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால், ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் கிங்.
நீங்கள் இந்நேரம், இந்த படத்தில் எந்த பானையில் எங்கே பாம்பு மறைந்திருக்கிறது என கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள் நிஜமாவே கிங்தான். உங்களுக்கு பாராட்டுகள்.
ஒருவேளை உங்களால் இன்னும் பாம்பைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். அந்த பாம்பு எங்கே இருக்கிறது என்று ஒரு குறிப்பு தருகிறோம். படத்தின் மேல் பகுதியில் பாருங்கள். மீண்டும் ஒருமுறை படத்தை உற்றுப் பார்த்து தேடுங்கள்.
/tamil-ie/media/media_files/uploads/2023/04/snake-3-15.jpg)
இப்போது அந்த பாம்பை எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஒருவேளை நீங்கள் இன்னும் அந்த பாம்பை அடையாளம் காண முடியவில்லை என்றால் பாம்பு எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.