/tamil-ie/media/media_files/uploads/2023/07/snake-optical-illusion-1.jpg)
ஆப்டிகல் இல்யூஷன் சவால்
Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உங்கள் மனதைக் குழப்பும், உங்கள் பார்வைக்கு சவால் விடும், உங்கள் கவனிக்கும் திறன்களை சோதிக்கும், அறிவாற்றல் திறன்களை மேம்படுத்துவதிலும், ஆக்கப்பூர்வமாக சிந்திக்க மூளையைத் தூண்டுவதிலும் அவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
/tamil-ie/media/media_files/uploads/2023/07/snake-optical-illusion-1-1.jpg)
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஓடும் தண்ணீரில் மறைந்திருக்கும் பாம்பை 8 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கும் கவனிக்கும் திறனுக்கும் சவால் விடுக்கப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா, ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள் கூர்மையான கவனிக்கும் திறன் உள்ளவர்.
இந்த வகையான ஆப்டிகல் இல்யூஷன் சவால்கள் உங்கள் கண்காணிப்பு திறன் மற்றும் புத்திசாலித்தனத்தை சோதிக்க ஒரு சிறந்த வழியாகும். நாளெல்லாம் கணியில் வேலை செய்து, இணையத்தில் சோர்ந்து போகும் உங்களுக்கு, பொழுதுபோக்குவதற்கும் உங்கள் சிக்கலைத் தீர்க்கும் திறன்களை மேம்படுத்துவதற்கும் ஒரு வேடிக்கையான மற்றும் ஈர்க்கக்கூடிய வழிதான் இந்த ஆப்டிகல் இல்யூஷன் புதிர் விளையாட்டு. நீங்கள் ஒருமுறை ஆப்டிகல் இல்யூஷன் புதிர்களை தீர்க்கும் விளையாட்டை எதிர்கொண்டு முயற்சி செய்து பாருங்கள். பிறகு, விளையாடிக் கொண்டே இருப்பீர்கள். அதிலிருந்து உங்களை யாராலும் தடுக்க முடியாது.
/tamil-ie/media/media_files/uploads/2023/07/snake-optical-illusion-2.jpg)
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் Reddit சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் ஓடும் தண்ணீர் இடம்பெற்றுள்ளது. இது கால்வாயா அல்லது நீரோடையா என்று தெரியவில்லை. ஆனால், இந்த படத்தில் தண்ணீரில் ஒரு பாம்பு மறைந்திருக்கிறது. அந்த பாம்பு எங்கே இருக்கிறது என்று உங்கள் கூர்மையான பார்வைக்கும் கவனிக்கும் திறனுக்கும் சவால் விடுக்கப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா, ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள் கூர்மையான கவனிக்கும் திறன் உள்ளவர். உங்களுக்கு நிகர் நீங்கள் மட்டும்தான். ட்ரை பண்ணி பாருங்கள்.
நீங்கள் இந்நேரம் இந்தப் படத்தில் தண்ணீரில் மறைந்திருக்கும் பாம்பை கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷனில் விடை கண்டுபிடிப்பதில் கூர்மையான கவனிக்கும் திறன் உள்ளவர் நீங்கள்தான். உங்களுக்கு பாராட்டுகள்.
/tamil-ie/media/media_files/uploads/2023/07/snake-optical-illusion-2-1.jpg)
ஒருவேளை உங்களால் இன்னும் இந்த படத்தில் தண்ணீரில் மறைந்திருக்கும் பாம்பை அடையாளம் காணமுடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். பாம்பு எங்கே இருக்கிறது என ஒரு குறிப்பு தருகிறோம். படத்தில் தண்ணீரில் உள்ள பகுதியில் கவனமாகப் பாருங்கள். பாம்பு கண்ணில் படலாம்.
இப்போது படத்தில் தண்ணீரில் மறைந்திருக்கும் பாம்பை எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆனாலும், சிலரால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள். அவர்களுக்காக, பாம்பு எங்கே இருக்கிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம்.
/tamil-ie/media/media_files/uploads/2023/07/snake-optical-illusion-3.jpg)
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.