Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் வெறுமனே ஒரு இணையப் பொழுதுபோக்கு விளையாட்டுமல்ல. அதை தத்துவத்தோடும் வாழ்க்கையோடும் பொருத்திப் பார்க்கலாம். எப்படி பொருந்தும் என்கிறீர்களா?
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பாம்பாட்டி மகுடியை ஊதுகிறார். ஆனால், கூடையில் இருந்த பாம்பு எங்கே போனது என்று தெரியவில்லை. 10 நொடிகளில் பாம்பை கண்டுபிடித்தால் மகுடிக்கு மயங்காத ராஜா நீங்கதான்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் விடுக்கும் சவால்கள் எப்படி வாழ்க்கையோடும் தத்துவத்தோடும் பொருந்திப் போகிறது என்று கேட்கிறீர்களா?
“கண்ணை நம்பாதே, உன்னை ஏமாற்றும்
நீ காணும் தோற்றம், உண்மை இல்லாதது
அறிவை நீ நம்பு, உள்ளம் தெளிவாகும்
அடையாளம் காட்டும், பொய்யே சொல்லாதது” என்ற பாடல் வரிகள் எம்.ஜி.ஆர் நடித்த நினைத்ததை முடிப்பவன் படத்திற்காக கவிஞர் மருதகாசி எழுதியது.
இந்த தத்துவப் பாடல் வரிகள் வாழ்க்கைக்கு மட்டுமல்ல ஆப்டிகல் இல்யூஷன் சவாலுக்கும் பொருந்தும். மேலோட்டமாகப் பார்த்தால், பாம்பு எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்கவே முடியாது. ஆனால், கொஞ்சம் ஸ்மார்ட்டாக அறிவுடன் யோடித்து தேடினால் பாம்பை எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் ஒரு நூற்றாண்டு பழமையானது. இந்த ஓவியம் 1920களில் வரையப்பட்டுள்ளது. இந்த படத்தில் பாம்பாட்டி தனது பாம்பு கூடைகளில் திறந்து வைத்துவிட்டு மகுடியை ஊதுகிறார். ஆனால், பாம்பு எங்கே போனது என்று தெரியவில்லை. பாம்பாட்டியிடம் அவருடைய பாம்பு எங்கே இருக்கிறது என்று 10 நொடிகளில் கண்டுபிடித்துக் கூறினால் மகுடிக்கு மயங்காதா ராஜா நீங்கள்தான். ஏனென்றால், இந்து உங்கள் யோசிக்கும் மூளைத் திறனுக்கு விடுக்கப்படும் சவால்.
நீங்கள் இந்நேரம், இந்த படத்தில் பாம்பு எங்கே இருக்கிறது என கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷனில் மகுடிக்கு மயங்காத ராஜா நீங்கள்தான். உங்களுக்கு பாராட்டுகள்.
ஒருவேளை உங்களால் இன்னும் பாம்பை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். பாம்பு எங்கே இருக்கிறது என்று ஒரு குறிப்பு தருகிறோம். பாம்பு நிச்சயமாக பாம்பாட்டியின் கூடையில் இல்லை, தரையிலோ, மரத்திலோ இல்லை. பாம்பு பாம்பாட்டியை விட்டுவிட்டு வேறு எங்கே சென்றுவிட முடியும். பாம்பாட்டியை உற்றுப் பாருங்கள். பாம்பை பிடியுங்கள்.
இப்போது பாம்பு எங்கே இருக்கிறது என்று எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஒருவேளை நீங்கள் இன்னும் பாம்பை அடையாளம் காணவில்லை என்றால் பாம்பு எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.