தேடித் தேடி தோற்றுவிட்டார்கள்… 10 நொடிகளில் பாம்பை கண்டுபிடிக்க சவால்… நீங்க ட்ரை பண்ணுங்க!
Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஒரு பாம்பு மறைந்திருக்கிறது. அதை 10 நொடிகளில் கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான் உங்கள் கூர்மையான பார்வைக்கு விடப்படும் சவால். பலரும் தேடித்தேடி தோற்றுவிட்டார்கள். நீங்க ட்ரை பண்ணி பாருங்க.
Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் விடுக்கும் சவால்கள் மிகவும் சுவாரசியமானவை. அதன் எளிமையில் கவரப்பட்டு, அதன் சுவாரசியத்தில் மயங்கி விடையைத் தேடத் தொடங்கினால், நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே உங்கள் கண்களை ஏமாற்றும். நீங்கள் முழித்துக்கொண்டிருக்கும்போதே உங்கள் மூளையைக் குழப்பும். விடை கண்டுபிடிக்க முடியாமல் நிற்கும்போது உங்கள் தலைமுடியை பிச்சிக்கொள்ளச் செய்யும். முடிவில் விடை தெரிய வரும்போது உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி மகிழ்ச்சி அளிக்கும்.
Advertisment
அதனால்தான், நவீன வேலை நெருக்கடிகளில் சிக்கித் தவிக்கும் கணினியில் வேலை செய்பவர்கள், சோர்வாக இருக்கும்போது ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து விடை கண்டுபிடித்து ரிலாக்ஸாகி உற்சாகம் அடைகிறார்கள். ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே ஒரு இணையப் பொழுதுபோக்கு புதிர்களாக மட்டுமல்லாமல் கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கிற விளையாட்டாகவும் இருக்கிறது. அதனால், நெட்டிசன்கள் ஆப்டிகல் இல்யூஷன் படங்களுக்கு வெறித்தனமாக விடையைத் தேடி வருகிறார்கள்.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஒரு பாம்பு மறைந்திருக்கிறது. அதை 10 நொடிகளில் கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான் உங்கள் கூர்மையான பார்வைக்கு விடப்படும் சவால்.
யூடியூபில் வெளியான இந்த ஆப்டிகல் இல்யூஷன் புதிர் படத்தில் ஒரு பாம்பு மறைந்திருக்கிறது. அதை உங்களால் 10 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று சவால் விடப்பட்டுள்ளது. இது மிகவும் எளிதானது என்று பாம்பைத் தேடத் தொடங்கிய நெட்டிசன்கள் பலரும் பாம்பைக் கண்டுபிடிக்க முடியாமல் தேடித் தேடி தோற்றுவிட்டார்கள். அதனால்தான் சொல்கிறோம். நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க. பாம்பைக் கண்டுபிடிங்க.
நீங்கள் இந்த படத்தில் மறைந்திருக்கும் பாம்பை கண்டுபிடித்துவிட்டிருந்தால், நீங்கள் ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் புதிர்களை தீர்ப்பதில் மாஸ்டர்தான். பாராட்டுகள். ஆனால், உங்களால் பாம்பை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் உங்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். பாம்பு ஒரு மூலையில் மறைந்திருக்கிறது. இப்போது படத்தை நன்றாக உற்று கவனித்து பாருங்கள்.
நீங்கள் இப்போது பாம்பை கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்றால் பரவாயில்லை. பாம்பு எங்கே இருக்கிறது என்று உங்களுக்கு வட்டமிட்டு காட்டுகிறோம். தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"