இந்த படத்துல பனி சிறுத்தையை 18 நொடிகளில் கண்டுபிடிச்சா… நீங்கதான் ஃபர்ஸ்ட்!
இந்த ஆப்டிகல் இல்யூஷன் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. ஒரு பனிப் பிரதேசத்தில் பனி மூடிய பாறைகள் நிறைந்த மலைப் பகுதியில் ஒரு பனிச் சிறுத்தை மறைந்திருக்கிறது. அதை 18 நொடிகளில் கண்டுபிடித்தால் நீங்கதான் ஃபர்ஸ்ட்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. ஒரு பனிப் பிரதேசத்தில் பனி மூடிய பாறைகள் நிறைந்த மலைப் பகுதியில் ஒரு பனிச் சிறுத்தை மறைந்திருக்கிறது. அதை 18 நொடிகளில் கண்டுபிடித்தால் நீங்கதான் ஃபர்ஸ்ட்.
Advertisment
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் வேலை தருகிற பயிற்சியாக இருக்கிறது. நவீன வாழ்க்கையின் வேலை நெருக்கடியில் சிக்கி சோர்ந்து போனவர்கள் சற்று ரிலாக்ஸாக இருப்பதற்கு ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் புதிர்களை விடுவிப்பதற்கு இணையப்பக்கங்களில் ஒதுங்குகிறார்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் புதிர்கள் முடிவில்லா குழப்பத்தில் ஆழ்த்தி உங்கள் தலைமுடியை பிச்சிக்கொள்ளச் செய்யும் முடிவில் விடை தெரியும்போது ஆச்சரியத்தில் ஆழ்த்தும். ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உங்களை ரிலாக்ஸாக்கி மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், பனிக்கட்டிகள் உறைந்திருக்கிற மலையில் பாறைகளுக்கு இடையே மறைந்திருக்கிற பனிச் சிறுத்தையை 10 நொடிகளில் கண்டுபிடிக்க வேண்டும். அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் ஃபர்ஸ்ட்.
சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் இந்த படத்தைப் பலரும் தீவிரமாக உற்று நோக்கி மறைந்திருக்கும் பனிச் சிறுத்தையைத் தேடி வருகிறார்கள். நீங்களும் பனிச் சிறுத்தையைத் தேடிப்பாருங்கள். ஐ.எஃப்.எஸ் அதிகாரி ரமேஷ் பாண்டே ட்விட்டரில் பகிர்ந்துள்ள இந்த படம் முதலில் ரியான் கிராகன் என்பவரால் எடுக்கப்பட்டது.
இந்த படத்தைப் பார்த்து பனிச் சிறுத்தையைத் தேடும் பலரும் குழம்பிப் போய் பனிச் சிறுத்தை எங்கே என்று தீவிரமாகத் தேடி வருகிறார்கள். சமூக ஊடக பயனர்கள் பலரும் பனிச் சிறுத்தை எங்கே மறைந்திருக்கிறது என்று ஆச்சரியத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்த படத்தில் உண்மையில் பனிச்சிறுத்தை இருக்கிறதா என்று இல்லையா என்று சந்தேகம் தெரிவித்து வருகின்றனர். சிலர் பனிச்சிறுத்தை கண்டுபிடிக்க முடியாது. விடுவிடுங்கள் என்று கூறி வருகின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"