Optical illuison game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறும் இணையப் பொழுதுபோக்கு புதிர்களாக மட்டுமல்லாமல், நாம் ஒரு காட்சியைப் பார்க்கும்போது அதன் முழு விவரத்தோடு பார்க்க வேண்டும் என்பதை கூறுகிறது. இது உங்களை ரிலாக்ஸ் செய்யும் விளையாட்டு. இது உங்களுக்கு ஒரு சுவாரசியமான அனுபவத்தை ஏற்படுத்தும்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள், பொதுவாக மனிதர்கள் ஒரு காட்சியைப் எப்படிப் பார்த்து உணர்ந்து புரிந்துகொள்கிறார்கள் என்ற அடிப்படையில், உருவாக்கப்படுகிறது. அதனால், கூர்மையான பார்வை உடைவர்கள் எளிதில் மறைந்திருக்கும் பொருளை கண்டுபிடித்துவிடலாம்.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் இரண்டு சிங்கங்களை சீண்டிய சுண்டெலி எங்கே இருக்கிறது என 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால், ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நிஜமாவே நீங்கள் ஜீனியஸ்தான்.
மனித மனம் என்பதே வேறுபடுத்திப் பார்ப்பதில்தான் தொடங்குகிறது. ஒரு உருவத்தை நாம் பார்க்கும் முறையும்கூட ஒப்பிட்டுப் பார்ப்பது அல்லது வேறுபடுத்திப் பார்ப்பது என்ற அடிப்படையில்தான் அமைந்திருக்கிறது. அதனால்தான், இது எருமை, இது நீர்யானை என்று நாம் அறிந்துகொள்கிறோம். காகிதப் பூக்களுக்கு இடையே உண்மையான பூவைக் கண்டுபிடிப்பது போன்றது. நகல்களுக்கு இடையே அசலைக் கண்டுபிடிப்பதைப் போன்றது. ஆப்டிகல் இல்யூஷன் உங்களை அதற்கு பயிற்சி செய்யும்.
இந்த படம் Best Quiz என்ற YouTube சேனலில் வெளியாகி உள்ளது. இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் மிகவும் வித்தியாசமானது. இந்த படத்தில் இரண்டு சிங்கங்கள் இருக்கிறது. ஆனால், அந்த சிங்கங்களின் முகத்தில் ஒரு கோபம் தெரிகிறது. அந்த கோபத்துக்கு காரணம் ஒரு சுண்டெலி. அந்த சுண்டெலி எங்கே இருக்கிறது என 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால், ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நிஜமாவே நீங்கள் ஜீனியஸ்தான்.
நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் சிங்கங்களை சீண்டிய சுண்டெலி எங்கே இருக்கிறது என கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்கள் ஆப்டிகல் இல்யூஷன் புதிர்களைத் தீர்ப்பதில் நிஜமாவே ஜீனியஸ்தான். உங்களுக்கு பாராட்டுகள்.
ஒருவேளை நீங்கள் இன்னும் சுண்டெலியைக் கண்டுபிடிக்கவில்லை என்றால் உங்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். சிங்கத்தை சீண்டிவிட்டு ஓடும் சுண்டெலியை மரத்தின் அருகே பாருங்கள்.
இப்போது நீங்கள் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் சுண்டெலியைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என கருதுகிறோம். இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். சுண்டெலி எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் படம் என்பது வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுமட்டுமல்ல ஒரு காட்சியைப் பார்க்கும்போது முழுவிவரத்துடன் பார்க்க உங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கிறது. தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.