Advertisment

இந்த படத்துல ‘தி லயன் கிங்’ சிம்பா எங்கே இருக்கிறது? 11 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா ?

Optical illusion: இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் தி லயன் கிங் படத்தில் வரும் சிம்பா என்ற சிங்கம் எங்கே இருக்கிறது என 11 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது.

author-image
WebDesk
New Update
Lion King

இந்த படத்துல ‘தி லயன் கிங்’ சிம்பா எங்கே இருக்கிறது என 11 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Source: Cinemark

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் என்பது மாயமில்லை, ஆனால் உங்கள் மனதைக் குழப்பும், ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தந்திரம். ஆப்டிகல் இல்யூஷன் என்பது நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் போதே உங்கள் கண்களை ஏமாற்றும் ஒரு கண்கட்டி வித்தை, ஆப்டிகல் இல்யூஷன் என்பது நெட்டிசன்களை  ஈர்க்கும் காந்தம்.  நீங்களும் ஒருமுறை விளையாடி முயற்சி செய்து பாருங்கள் சுவாரசியத்தில் மூழ்கிப்போவீர்கள்.

Advertisment

Lion King

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் தி லயன் கிங் படத்தில் வரும் சிம்பா என்ற சிங்கம் எங்கே இருக்கிறது என 11 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. சிம்பாவை ஒரு உண்மையான தி லயன் கிங் பட ரசிகரால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் சவால் விடப்படும் புதிர்கள் என்பது மனிதர்கள் பொதுவாக ஒரு படத்தை எப்படிப் பார்த்து உணர்கிறார்கள் என்பதை அடிப்படையாக வைத்து உருவாக்கப்படுகிறது. அதனால், நீங்கள் யோசிக்கவே முடியாத இடத்தில் மறைத்து வைக்கப்படும். அப்படியே வெளிப்படையாக வைத்தாலும், அதைப் போன்ற உருவ ஒற்றுமையுள்ள பொருட்களுக்கு இடையே மறைத்து வைத்து பார்ப்பவர்களைக் குழப்பமடையச் செய்யும் விதமாக இருக்கும். ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஏதோ புதிய ஒரு விஷயம் அல்ல. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் பண்டைய கிரேக்க - ரோமானியர் காலத்திலேயே இருந்ததற்கான சான்றுகள் உள்ளனர். கிரேக்க தத்துவ அறிஞர் அரிஸ்டாட்டில் ஓடும் நீரைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது நின்று கொண்டிருக்கிற இடம் நகர்வதை ஆப்டிகல் இல்யூஷன் என்றார். ஆப்டிகல் இல்யூஷன் என்றால் வேறு ஒன்றுமில்லை, அது ஒரு தோற்ற மயக்கம். இந்திய மரபில், பல சிற்பங்கள் ஆப்டிகல் இல்யூஷன் தன்மையைக் கொண்டுள்ளன. கோயில்களில் இடம் பெற்றுள்ள யாளி சிற்பம்கூட ஆப்டிகல் இல்யூஷன் வடிவம் என்று கருதலாம்.

Lion King 2

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் Cinemark தளத்தில் வெளியாகி உள்ளது.  இந்த படத்தில் உலகம் முழுவதும் வெளியாகி பிரம்மாண்ட வெற்றி பெற்ற அனிமேஷன் படமான  ‘தி லயன் கிங்’ படத்தில் இடம்பெற்ற கதாபாத்திரங்களான திமோன், ஆங்கிலத்தில் மீர்கேட் (Meerkat) இது கீரிப்பூனை வகையைச் சேர்ந்தது. அதே போல, பும்பா கதாபாத்திரம் ஒரு பன்றி. இந்த இரண்டு கதாபாத்திரங்களை வைத்து  இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த படம் முழுவதும்  ‘தி லயன் கிங்’ படத்தில் இடம்பெற்ற திமோன் (கீரிப்பூனை) பும்பா (பன்றி) பொம்மைகள் நிறைந்திருக்கிறது. இவற்றுக்கு இடையே,  ‘தி லயன் கிங்’ படத்தின் முக்கிய கதாபாத்திரமான சிம்பா (சிங்கம்) இருக்கிறது. அந்த சிங்கம் எங்கே இருக்கிறது என சாதாரணமாக பார்த்தால் தெரியாது. கூர்மையான பார்வையும் உண்மையான ‘தி லயன் கிங்’ ரசிகர்களால் மட்டுமே இந்த படத்தில் சிம்பா எங்கே இருக்கிறது என கண்டுபிடிக்க முடியும். அப்படி கண்டுபிடித்தால் நீங்கள் நிஜமாகவே ‘தி லயன் கிங்’ படத்தின் உண்மையான ரசிகர்.

இந்நேரம் நீங்கள் இந்த படத்தில் மறைந்திருக்கும் ‘தி லயன் கிங்’ பட சிம்பாவை கன்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷனில் நிஜமாவே நீங்க ஜீனியஸ்தான். உங்களுக்கு பாராட்டுகள்.

ஒருவேளை உங்களால் இந்த படத்தில் மறைந்திருக்கும் ‘தி லயன் கிங்’ பட சிம்பாவைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப் பட வேண்டாம். உங்களுக்காக ‘தி லயன் கிங்’ பட சிம்பா எங்கே இருக்கிறது என கண்டுபிடித்து வட்டமிட்டுக் காட்டுகிறோம்.

Lion king 3

ஆப்டிகல் இல்யூஷன் என்பது வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டு அல்ல. அது கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கிற விளையாட்டு. அதனால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் உள்ள ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral Photo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment