Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் மறைந்திருக்கும் விலங்குகளைக் கண்டுபிடிப்பது என்பது வைக்கோல் போரில் ஊசியைத் தேடுவதைப் போன்றது. இன்னும் சரியாக சொல்வதென்றால், பளபளக்கும் போலி கண்ணாடி கற்களுக்கு மத்தியில் மறைந்திருக்கும் வைரக் கல்லைக் கண்டுபிடிப்பதைப் போன்றது.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படம் மிகவும் சுவாரசியமானது. இந்த படத்தில் கோழிகளுக்கு இடையே மறைந்திருக்கும் 3 ஆந்தைகளை 9 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. கண்டுபிடிச்சா நீங்க ஜீனியஸ். ஏனென்றால், அது அவ்வளவு சுலபமல்ல.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நெட்டிசன்களின் விருப்பமான இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டாக மாறியிருக்கிறது. கணினியில் வேலை செய்யும் நிறைய பேர், வேலை நெருக்கடியில் சிக்கி சோர்ந்துபோயிருக்கும்போது, இந்த ஆப்டிகல் இல்யூஷன் புதிர்தான் அவர்களின் ரிலாக்ஸான விளையாட்டாக இருக்கிறது. அதனால்தான், ஆப்டிகல் இல்யூஷன் புதிர்கள், வெறும் ஒரு இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டாக மட்டுமில்லாமல் கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கிற ஒன்றாகவும் இருக்கிறது.
இந்த படம் ஆப்டிகல் இல்யூஷன் ஓவியங்களை வரைவதில் புகழ்பெற்ற ஹங்கேரி நாட்டு ஓவியர் ஜெர்ஜ்லி டுடாஸ் டுடால்ஃப் வரைந்தது. இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம், சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த படம் முழுவதும் சேவல்களே நிறைந்திருக்கிறது. ஆனால், கோழிகளுக்கு இடையே 3 ஆந்தைகள் இருக்கிறது. அந்த 3 ஆந்தைகளும் எங்கே இருக்கிறது என்று 9 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால், ஆப்டிகல் இல்யூஷன் சவால்களை தீர்ப்பதில் நிஜமாவே நீங்கள் ஜீனியஸ்தான். ஏனென்றால், சில விலங்குகள் பறவைகள் வேறுவேறு விலங்கினங்களாக இருந்தாலும் அவற்றுக்கு இடையே சில ஒற்றுமையும் இருக்கும். அந்த வகையில், ஆந்தையின் தலை சேவலின் தலையைப் போல இருப்பது நாம் அனைவரும் அறிவோம்.
அந்த வகையில், கோழிகளுக்கு இடையே மறைந்திருக்கும் 3 ஆந்தைகளை 9 நொடிகளில் கண்டுபிடிப்பது என்பது பெரிய சவாலாக இருக்கும்.
இந்நேரம் நீங்கள் மறைந்திருக்கும் 3 ஆந்தைகளையும் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகள் இல்யூஷன் படத்தின் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் ஜீனியஸ்தான். உங்களுக்கு பாராட்டுகள்.
ஒருவேளை, நீங்கள் இன்னும் 3 ஆந்தைகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் உங்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். ஒவ்வொரு சேவலின் தலையையும் கவனமாகப் பாருங்கள். அதன் அலகு மாறுபடும். அலகுதான் வித்தியாசம். இப்போது படத்தை மீண்டும் ஒருமுறை நன்றாக உற்றுப் பார்த்து கண்டுபிடியுங்கள்.
இப்போது, கோழிகளுக்கு இடையே மறைந்திருக்கும் 3 ஆந்தைகளை எளிதாக கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்கள் இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்றால் 3 ஆந்தைகளும் எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம்.
இணையத்தில் ரிலாக்ஸாக இருக்க தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள். அது கண்ணுக்கும் மூளைக்கும் நல்ல பயிற்சியாக இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.