நாய்களுக்கு இடையே மறைந்திருக்கும் புலி; 14 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க கில்லாடிதான்
Optical illusion game: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் கூட்டாமாக இருக்கிற நாய்களுக்கு இடையே ஒரு புலி மறைந்திருக்கிறது. அதை 14 நொடிகளில் கண்டுபிடிக்க வேண்டும் என்பதான் சவால். அப்படி கண்டுபிடித்தால் நிஜமாவே நீங்க கில்லாடிதான்.
Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் விடையைத் தேடுவது என்பது வைக்கோல் போரில் ஊசியைத் தேடுவதைப் போன்றது. ஏழு மலை, ஏழு கடல் தாண்டி இருக்கும் குகைக்குள் இருக்கும் கிளிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் அரக்கனின் உயிரைப் போல, ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் விலங்குகளைக் கண்டுபிடிப்பது என்பது மிகவும் சுவாரசியமானது.
Advertisment
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் கூட்டாமாக இருக்கிற நாய்களுக்கு இடையே ஒரு புலி மறைந்திருக்கிறது. அதை 14 நொடிகளில் கண்டுபிடிக்க வேண்டும் என்பதான் சவால். அப்படி கண்டுபிடித்தால் நிஜமாவே நீங்க கில்லாடிதான்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உங்கள் மனதை மருளச் செய்து மூளையைக் குழப்பும். ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் பார்க்கத்தான் எளிமையாக இருக்கும். ஆனால், பார்க்க பார்க்க குழப்பம்தான் மிஞ்சும். ஆனால், அந்த குழப்பம் மன அழுத்தத்தை அளிக்காது. மாறாக, முடிவில் விடை தெரியும்போது உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி மகிழ்ச்சி அளிக்கும். இதுதான் ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் சிறப்பம்சம்.
யூடியூபில் வெளியான இந்த படத்தில், நாய்கல் கூட்டமாக நின்று கொண்டிருக்கிறது. ஆனால், நாய்களுக்கு மத்தியில் ஒரு புலி மறைந்திருக்கிறது. அதைத் தெரியாமல் நாய்கள் ரிலாக்ஸாக நின்று கொண்டிருக்கின்றன. அந்த புலியை 14 நொடிகளில் கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான் உங்கள் கூர்மையான பார்வைக்கான சவால். மறைந்திருக்கும் புலியை 14 நொடிகளில் கண்டுபிடித்தால் நீங்கள் நிஜமாவே கில்லாடிதான். ஏனென்றால், அந்த அளவுக்கு இந்த புதிர் கடினமான சவாலாக இருக்கும்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தின் சவாலை ஏற்று நெட்டிசன்கள் பலரும் வெறித்தனமாக புலியைத் தேடி வருகிறார்கள். பலரும் தேடித் தேடி தோல்வியை ஒப்புகொண்டதுதான் மிச்சம். ஆனால், நீங்கள் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நிஜமாவே நீங்க கில்லாடிதான். உங்களுக்கு பாராட்டுகள்.
ஒருவேளை நீங்கள், மறைந்திருக்கும் புலியைக் கண்டுபிடிக்கவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். புலி புதரில் மறைந்திருக்கிறது. இப்போது புலியை எளிதாக கண்டுபிடித்துவிடலாம். படத்தை மீண்டும் ஒருமுறை நன்றாக உற்றுப் பார்த்து கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள்.
நாய்களுக்கு இடையே மறைந்திருக்கும் புலியை இன்னும் உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் பரவாயில்லை. புலி எங்கே இருகிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம். தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தைப் பார்த்து விடையைக் கண்டுபிடித்து பயிற்சி செய்யுங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”