Advertisment

வரிக்குதிரைகள் கூட்டத்தில் வேட்டையாட புகுந்த புலி... 11 நொடிகளில் கண்டுபிடிச்சா அதிபுத்திசாலி!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், வரிக்குதிரைகள் கூட்டத்தில், வேட்டையாட புகுந்த புலி எங்கே இருக்கிறது 11 நொடிகளில் கண்டுபிடித்தால் உண்மையிலேயே நீங்கள் அதிபுத்திசாலிதான். ஏனென்றால், இது மிகவும் கடினமான சவால்.

author-image
WebDesk
New Update
Tiger

வரிக்குதிரைகள் கூட்டத்தில் வேட்டையாட புகுந்த புலி எங்கே இருக்கிறது கண்டுபிடிக்க முடியுமா?

Optical Illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தையும் சமூக வலைதளங்களையும் ஒரு சூறாவளியைப் போல தாக்கி வருகிறது. அந்த அளவுக்கு லட்சக் கணக்கான நெட்டிசன்களை காந்தம் போல ஈர்த்து ஆச்சரியம் அளித்து வருகிறது.

Advertisment

Tiger

அந்த வகையில், இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படம் ஒரு காட்டுப் பகுதியில் கூட்டமாக மேய்ந்துக்கொண்டிருக்கும் வரிக்குதிரைகளை வேட்டையாடுவதற்காக ஒரு புலி மறைந்திருக்கிறது. வரிக்குதிரைகளைப் போலவே இருக்கும் அந்த புலியை 11 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி, அந்த புலியை 11 நொடிகளில் கண்டுபிடித்துவிட்டால், உண்மையிலேயே நீங்கள் அதிபுத்திசாலிதான். இது கடினமான சவால்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒரு சுவாரசியமான பொழுது போக்கு புதிர்களாக மூளைக்கு நல்ல பயிற்சி அளித்து வருகிறது. அதே நேரத்தில், அவை கூர்மையான பார்வைத் திறனுக்கு சவால் விடுவதால், நெட்டிசன்கள் இணையத்தில் ஆப்டிகல் இல்யூஷன் படங்களைத் தேடித்தேடிப் பார்த்து வருகிறார்கள். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் சுவாரசியமானது, காட்டுப் பகுதியில் வரிக்குதிரைகள் கூட்டமாக மேய்ந்துகொண்டிருக்கும்பொது, அவற்றை வேட்டையாடுவதற்கு ஒரு புலி நுழைந்துள்ளது. ஆனால், இந்த படத்தில் புலிக்கு வரிக்குதிரைகளின் தோல்களைப் போல மார்ஃபிங் செய்திருக்கிறார்கள். இதனால், வரிக்குதிரைகள் இடையே மறைந்திருக்கும் வரிப்புலியைக் கண்டுபிடிப்பது சவலாக இருக்கிறது. ஆனால், சற்று கவனமாக பார்த்தால், எளிதில் புலியைக் கண்டுபிடித்துவிடலாம்.

Tiger II

வரிக்குதிரைகளுக்கு இடையே மறைந்திருக்கும் புலியை 11 நொடிகளில் கண்டுபிடித்துவிட்டீர்கள் என்றால் நீங்கள் அதிபுத்திசாலிதான். உங்களுக்கு பாராட்டுகள். கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், உங்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம்.

இந்த படத்தில் வலது பக்கம் புலி வரிக்குதிரை போல மறைந்திருக்கிறது. இப்போது படத்தை நன்றாகப் பார்த்து கண்டுபிடியுங்கள். இப்போதும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், புலி எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம் பாருங்கள்.

Tiger III

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral Photo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment