Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் சவாலில் சிங்கம், புலி, பாம்பைக் கண்டுபிடியுங்கள் என்றாலே நெட்டிசன்கள் பரபரப்படைந்து வெறித்தனமாகத் தேடத் தொடங்கி விடுகிறார்கள். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படமும் மறைந்திருக்கும் புலியை கண்டுபிடிக்க முடியுமா என்று சவால் விடுக்கிறது.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் காட்டில் தனியாக உலவும் புலியை 7 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான கவனிக்கும் திறனுக்கு சவால் விடப்படுகிறது. கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கதான் சிங்கம். ட்ரை பண்ணி பாருங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் என்பது பொதுவாக மனிதர்களின் பார்வைக் கோணத்தையும் ஒரு காட்சியை எப்படிப் பார்த்து உணர்ந்து புரிந்துகொள்கிறார்கள் என்பதையும் அடிப்படையாகக் கொண்டது. பொதுவாக மனிதர்கள் முதல்பார்வையிலேயே பார்த்த நொடியிலேயே அந்த காட்சியின் முழு விவரங்களையும் அறிவதில்லை. மெதுவாகத்தான் உணர்ந்து அறிகிறார்கள். இதை அடிப்படையாக வைத்துதான் ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் சவால் அமைகிறது. அது மட்டுமல்ல, இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உங்கள் கவனத்தை வேறொரு பக்கம் ஈர்த்துவிட்டு, மறைந்திருக்கும் விலங்கு பக்கம் உங்கள் கவனத்தை ஈர்க்காமல் இருக்கும்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் Best Quiz (YouTube)தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் காட்டில் தனியாக ஒரு புலி உலவுகிறது. அந்த புலி எங்கே இருக்கிறது என 7 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான கவனிக்கும் திறனுக்கு சவால் விடப்படுகிறது. கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கதான் சிங்கம். ட்ரை பண்ணி பாருங்கள்.
நீங்கள் இந்நேரம் இந்தப் படத்தில் காட்டில் உலவும் புலியைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் ஓபன் சேலஞ்சில் விடை கண்டுபிடிப்பதில் நிஜமாவே நீங்கள்தான் சிங்கம். உங்களுக்கு பாராட்டுகள்.
ஒருவேளை உங்களால் இன்னும் இந்த படத்தில் உள்ள புலியைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். புலி எங்கே இருக்கிறது என ஒரு குறிப்பு தருகிறோம். படத்தில் மரங்களின் அருகே கவனமாகப் பாருங்கள். புலியைக் கண்டுபிடித்துவிடலாம்.
இப்போது படத்தில் மறைந்திருக்கும் புலியை எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆனாலும், சிலரால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள். சிலர் புலி இல்லை என்று கூறுகிறார்கள். அவர்களுக்காக, புலி எங்கே இருக்கிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.