Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நெட்டிசன்களின் அடிக்ஷனாகி இருப்பதால் புதிர்களுக்கான விடையை வெறித்தனமாகத் தேடி வருகிறார்கள். ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தையும் சமூக வலைதளங்களையும் ஒரு சூறாவளி போல தாக்கி வருகிறது. நெட்டிசன்கள் வெளிச்சத்தை நோக்கி படையெடுக்கும் விட்டில் பூச்சிகள் போல, ஆப்டிகல் இல்யூஷன் படங்களை நோக்கி படையெடுத்து புதிர்களை உடைத்து வருகிறார்கள்.

அதிலும் குறிப்பாக, ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் விலங்குகளைத் தேடி கண்டுபிடிப்பது என்பது நிஜமாகவே ஒரு ட்ரெக்கிங் அனுபவத்தைக் கொடுக்கும். இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், காட்டில் மறைந்திருக்கும் புலியை 5 நொடிகளில் கண்டுபிடிக்க வேண்டும். அப்படி கண்டுபிடித்து ஆப்டிகல் இயூஷனில் நீங்கள்தான் சிங்கம் என்று நிரூபியுங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஏதோ இன்று நேற்று தோன்றியதல் பண்டைய கிரேக்கர்கள், ரோமானியர்கள் காலத்தில் இருந்தே இருந்து வருகிறது. இந்தியாவில் பழங்கால கோயில்களில் உள்ள பல சிற்பங்கள் ஆப்டிகல் இல்யூஷன் தன்மையில் உள்ளது.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் புதிர்கள் பொழுதுபோக்கு விளையாட்டுகளாக மட்டும் இல்லாமல் நவீன வாழ்க்கையில் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் மனிதர்கள் ரிலாக்ஸாக ஒதுங்கும் இடமாக இருக்கிறது. அதனால்தான், பலரும் ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் புதிர்களை விடுவிப்பதில் ஆர்வத்துடன் ஈடுபடுகிறார்கள்.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஒரு காட்டு வழியாக செல்லும் சாலையில், காட்டில் ஒரு புலி மறைந்திருக்கிறது. அந்த புலி சரியாக எங்கே மறைந்திருக்கிறது என்று கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான் சவால்.

யூடியூபில் பதிவேற்றப்பட்ட இந்த வீடியோவில், ஒரு அடர்ந்த காட்டின் நடுவே ஒரு சாலை செல்கிறது. இருபுறமும் பசுமையான மரங்கள் இருக்கிறது. இந்த சாலை அடர்ந்த காட்டு வழியே செல்வதால் காட்டில் வசிக்கும் புலி சாலைகளில் நடந்து செல்வதற்கான சாத்தியம் உள்ளது. அப்படி புலி ஒன்று அவ்வழியே வரும்போது எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தில், ஒரு புலி மறைந்திருக்கிறது. அந்த புலியை 5 நொடிகளில் கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷன் புதிர்களை விடுவிப்பதில் நீங்கள்தான் சிங்கம். ஏனென்றால், காட்டில் மறைந்திருக்கும் புலியை 5 நொடிகளில் கண்டுபிடிப்பது என்பது அவ்வளவு எளிதானது அல்ல. உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால். புலி எங்கே இருக்கிறது என்று கண்டுபிடித்து ஆப்டிகல் இல்யூஷன் புதிர்களை விடுவிப்பதில் நீங்கள்தான் சிங்கம் என்று நிரூபியுங்கள்.
இந்த படத்தில் மறைந்திருக்கும் புலியை 5 நொடிகளில் கண்டுபிடித்துவிட்டால் வாழ்த்துகள். ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் சிங்கம். கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். புலி எங்கே மறைந்திருக்கிறது என்பதை வட்டமிட்டு காட்டுகிறோம். நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“