Advertisment

இந்த படத்தில் 10 நொடிகளில் புலியைக் கண்டுபிடிங்க…. ஆப்டிகல் இல்யூஷனில் சிங்கம்னு நிரூபிங்க

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் சவாலில் ஒரு கருப்பு வெள்ளைப் படத்தில் புதரில் மறைந்திருக்கும் புலியை 10 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் சிங்கம்.

author-image
WebDesk
New Update
Optical Illusion, Optical Illusion Pictures, Optical Illusion Viral Picture, Optical Illusion Animal Picture, ஆப்டிகல் இல்யூஷன், ஆப்டிகல் இல்யூஷன் படம், ஆப்டிகல் இல்யூஷன் சவால், Optical Illusion Viral Photos, Optical Illusion Latest, about optical illusion,Optical Illusion photos, Optical Illusion pictures, Optical Illusion images

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் என்பது மாயமில்லை, மந்திரமில்லை. ஆனால், இது ஒரு மிகவும் சுவாரசியமான விளையாட்டு. நீங்கள் ஒருமுறை ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் விலங்கைக் கண்டுபிடித்துவிட்டீர்கள் என்றால் அதற்கு பிற்கௌ, உங்களால் இந்த விளையாட்டை மறக்கவே முடியாது.

Advertisment
publive-image

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் சவாலில் ஒரு கருப்பு வெள்ளைப் படத்தில் புதரில் மறைந்திருக்கும் புலியை 10 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் சிங்கம்.

“நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே

நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே

நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே

நீங்களெல்லாம் சொற்பனந்தானோ

பல தோற்ற மயக்கங்களோ சொப்பனந்தானோ

பல தோற்ற மயக்கங்களோ”
என்ற பாரதியின் பாடல் வரிகள் ஆப்டிகல் இல்யூஷன் படங்களுக்கு அப்படியே பொருந்தும்.

பாரதி பாடல் வரிகள் மட்டுமல்ல,

“கண்ணை நம்பாதே, உன்னை ஏமாற்றும்

நீ காணும் தோற்றம், உண்மை இல்லாதது

அறிவை நீ நம்பு, உள்ளம் தெளிவாகும்

அடையாளம் காட்டும், பொய்யே சொல்லாதது”
என்ற கவிஞர் மருதகாசியின் பாடல் வரிகளும் அப்படியே பொருந்தும். அதனால், ஆப்டிகல் இல்யூஷனை வெறும் விளையாட்டாகப் பார்த்தால் விளையாட்டு. தத்துவமாகப் பார்த்தால் தத்துவம்.

publive-image

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படம் ஒரு கருப்பு வெள்ளைப் படம். இந்த படத்தில் ஒரு காட்டில் உள்ள புதரில் ஒரு புலி மறைந்திருக்கிறது. அந்த புலி எங்கே இருக்கிறது என்று 10 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் சிங்கம். மறைந்திருக்கும் புலியைக் கண்டுபிடிங்க நீங்க சிங்கம்னு நிரூபிங்க.

நீங்கள் இந்நேரம் இந்தப் படத்தில் மறைந்திருக்கும் புலியைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷனில் நிஜமாவே நீங்கள் சிங்கம்தான். உங்களுக்கு பாராட்டுகள்.

ஒருவேளை உங்களால் இன்னும் இந்த படத்தில் புலியை அடையாளம் காணமுடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். புலி எங்கே இருக்கிறது என ஒரு குறிப்பு தருகிறோம். படத்தில் இடது ஓரத்தில் கவனமாகப் பாருங்கள்.

publive-image

இப்போது படத்தில் மறைந்திருக்கும் புலியை எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆனாலும், சிலரால் இன்னும் புலியை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் புலி எங்கே இருக்கிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Viral Viral Photo Viral News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment