Optical Illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே உங்கள் கண்களை ஏமாற்றும், நீங்கள் முழித்துக் கொண்டிருக்கும்போதே உங்கள் மூளையைக் குழப்பும். யோசித்துக் கொண்டிருக்கும்போதே உங்கள் மனதை மருளச் செய்யும். விடையைக் கண்டுபிடிக்க முடியாமல் தலை முடியை பிச்சிக்கொள்வீர்கள். ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் சுவாரசியமும் சிறப்பம்சமும் இதுதான்.

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஒரு காய்ந்த பெரிய மரத்தில் ஒரு புலி மறைந்திருக்கிறது. அந்த புலியை 10 நொடிகளில் கண்டுபிடிக்க வேண்டும் என்பதே சவால். புலியைக் கண்டுபிடித்தால் நிஜமாவே நீங்க பலே கில்லாடி. ஏனென்றால் அது மிகவும் சவாலானது.

மறைந்திருக்கும் புலியைக் கண்டுபிடியுங்கள், சிங்கத்தைக் கண்டுபிடியுங்கள் என்று சவால் விடுத்து வெளியாகும் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நெட்டிசன்களின் அடிக்ஷனாகி வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒரு பொழுதுபோக்கு புதிராக மட்டுமல்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிப்பவையாகவும் இருக்கிறது.

யூடியூபில் வெளியான இந்த படத்தில் ஒரு பெரிய மரத்தின் அடிப்பகுதி காய்ந்து போய் இருக்கிறது. அதில், ஒரு புலி இருகிறது. ஆனால், அது கண்ணுக்கு தெரியாத அளவில், அந்த மரத்தின் நிறத்தில் இருப்பதால் அது வெளிப்படையாகத் தெரியாது. அதனால், இந்த மரத்தில் மறைந்திருக்கும் புலியை 10 நொடிகளில் கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான் உங்கள் கூர்மையான பார்வைக்கான சவால். கண்டுபிடித்தால் நிஜமாவே நீங்கள் பலே கில்லாடிதான். ஏனென்றால், மரத்தில் படுத்துறங்கும் புலியைக் கண்டுபிடிப்பது அவ்வளவு எளிதல்ல. மிகவும் கடினமானது. புலியை கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள்.
இந்நேரம் நீங்கள் மரத்தில் படுத்து உறங்கும் புலியை 10 நொடிகளில் கண்டுபிடித்துவிட்டிருந்தால் நீங்கள் பலே கில்லாடிதான். பாராட்டுகள். கண்டுபிடிக்கவில்லை என்றால் உங்களுக்கு ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தில் வலது பக்கம் பாருங்கள் கண்டுபிடிக்கலாம்.

இன்னும் உங்களால் புலியை அடையாளம் காண முடியவில்லை என்றால் பரவாயில்லை. புலி எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம். தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“