Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படம் என்பது ஒரு தந்திரம்; ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு மாயாஜாலம். ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு இணையப் புதிர் விளையாட்டு. ஆனால், அது உங்களை ரிலாக்ஸ் செய்ய வைக்கும்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒருவர் ஒரு படத்தை எப்படி பார்த்து உணர்கிறார். எந்த கோணத்தில் பார்க்க பழக்கப்பட்டிருக்கிறார் என்பதை அடிப்படையாக வைத்து உருவாக்கப்படுகிறது.

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படம் விண்டேஜ் காலத்தைச் சேர்ந்தது. ஐக்யூ டெஸ்ட்டை அடிப்படையாகக் கொண்ட இந்த படத்தில் இரண்டு பூனைகள் மறைந்திருக்கிறது. அதை 19 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என சவால். இதுவரை 1% பேர் மட்டுமே கண்டுபிடித்திருக்கிறார்கள். நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கிற புதிர்களாகவும் இருக்கிறது. அதே நேரத்தில் சில ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஐக்யூ டெஸ்ட் செய்யவும் பயன்படுத்தப்படுகிறது. சில ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உளவியல் ரீதியாக ஆளுமையையும் குறிப்பிடுகிறார்.

அந்த வரிசையில் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் ஒரு விண்டேஜ் படம். ஹெக்டிக் நிக் என்ற நபர் சமூக வலைதளங்களில் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தை பதிவிட்டுள்ளார். இந்த படத்தில் ஒரு மனிதன் ஒரு மெத்தையில் உட்கார்ந்து செய்தித்தாளைப் படிக்கிறார். அவரது மனைவி அவருக்கு எதிரே ஒரு நாற்காலியில் அமர்ந்துள்ளார். அவர்களின் மகள் தரையில் விளையாடிக் கொண்டிருக்கிறாள். அந்த அறையில் 2 பூனைகளும் இருக்கிறது. அந்த பூனைகளை 19 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என சவால் விடப்பட்டுள்ளது. இதுவரை 1% பேர் மட்டுமே சரியாக கண்டுபிடித்திருக்கிறார்கள். நீங்கள் அந்த 1% கூர்மையான பார்வையாளர்களின் வரிசையில் சேர முயற்சி செய்து பாருங்கள்.
அதுமட்டுமில்லாமல், இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் உங்கள் ஐக்யூவை சோதிக்க மற்றொரு வேடிக்கையான வழியாகவும் உள்ளது. இருப்பினும், உண்மையான ஐக்யூ சோதனையை மேற்கொள்வது உங்கள் ஐக்யூ அளவை அறிந்து கொள்வதற்கான ஒரு சிறந்த வழியாக இருக்கும்.
அறைக்குள் மறைந்திருந்த 2 பூனைகளைக் கண்டுபிடிக்க முயலும் ஆயிரக்கணக்கானவர்கள் தலை முடியைப் பிச்சிக்கொள்கிறார்கள். கடினமான புதிர்களுடன் உங்கள் மூளைக்கு எவ்வளவு உடற்பயிற்சி செய்கிறீர்களோ, அந்த அளவுக்கு நீங்கள் புத்திசாலியாக இருப்பீர்கள் என்று ஆய்வுகள் காட்டுகின்றன.
ஆப்டிகல் இல்யூஷன் படம் எப்பொழுதும் நமது மூளை எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பற்றிய சில கண்கவர் பார்வையை அளிக்கிறது. நிறம், ஒளி மற்றும் வடிவங்களின் குறிப்பிட்ட சேர்க்கைகள் நம் மூளையில் இல்லாத ஒன்றை பார்வைக்கு உணர வைக்கும். எனவே, இந்த விண்டேஜ் ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்துள்ள 2 பூனைகளை நீங்கள் கண்டுபிடித்துவிட்டீர்களா?

இந்த படத்தில் மறைந்திருக்கும் 2 பூனைகளைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினமானது. அறையில் கணவன், மனைவி மற்றும் அவர்களின் மகளைக் கண்டறிவது எளிதாக இருந்தாலும், மறைந்திருக்கும் பூனைகளைக் கண்டுபிடிக்க உங்களுக்கு சிறிது நேரம் ஆகலாம். படத்தை உன்னிப்பாகப் பார்க்க வேண்டும். முதல் பூனை மனிதனின் காலுக்கு அடியில் ஒளிந்து கொண்டிருக்கிறது. இரண்டாவது பூனையை பெண்ணின் மடியில் இருப்பதைப் பார்க்கலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“