New Update
/indian-express-tamil/media/media_files/2HcZ0z6EQH3Y4tLFwNAn.jpg)
இந்த படத்துல மறைந்திருக்கும் 2 முகங்களை 6 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா?
இந்த படத்துல மறைந்திருக்கும் 2 முகங்களை 6 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா?
Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு இணையப் பொழுதுபோக்கு விளையாட்டு மட்டுமல்ல, அது லட்சக் கணக்கான நெட்டிசன்களை கவர்ந்து ஈர்க்கும் ராட்சத காந்தம் அதன் சுவாரசியத்தால் ஈர்த்து வருகிறது.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் 2 முகங்களை 6 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கும் கவனிக்கும் திறனுக்கும் சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் நீங்கதான் வெற்றி முகம். இது மிகவும் கடினமான சவால்.
ஆப்டிகல் இல்யூஷன் பல வகைகளாக இருக்கிறது. இந்த படத்தில் மறைந்திருக்கிற, மனிதர்கள், விலங்குகள், பறவைகளைக் கண்டுபிடியுங்கள் என சவால் விடப்படுகிறது. அதே போல, இந்த படத்தில் உங்களுக்கு முதலில் என்ன தெரிகிறதோ, அதை வைத்து உங்களின் ஆளுமையை குணாதிசயங்களைக் கூறுவது இன்னொரு வகை. இந்த படத்தில் எத்தனை விலங்குகள் இருக்கிறது என்று கண்டுபிடிக்க சவால் விடுவது இன்னொரு வகை இப்படி பல வகையான ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெளியாகி நெட்டிசன்களை ஈர்த்து வருகிறது.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் Jagranjosh தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஒரு ஆணும் பெண்ணும் சோஃபாவில் எதிர் எதிரே அமர்ந்திருக்கிறார்கள். இந்த படத்தில் இவர்கள் மட்டுமில்லாமல் மேலும் 2 முகங்கள் அறைந்திருக்கின்றன. அந்த 2 முகங்களையும் மேலோட்டமாகப் பார்த்தால் தெரியாது. கூர்மையாக பார்த்தால் மட்டுமே தெரியும். அதனால், நீங்கள் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் 2 முகங்களையும் 6 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று கூர்மையான பார்வைக்கும் கவனிக்கும் திறனுக்கும் சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் நீங்கதான் வெற்றி முகம். இது மிகவும் கடினமான சவால்.
நீங்கள் இந்நேரம் இந்த படத்தில் மறைந்திருக்கும் 2 முகங்களைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என நம்புகிறோம். நிஜமாவே ஆப்டிகல் இல்யூஷனில் உங்களுக்கு வெற்றி முகம்தான். உங்களுக்கு பாராட்டுகள்.
ஆனால், சிலர் 1 முகத்தைக் கண்டுபிடித்துவிட்டோம் 2வது முகம் எங்கே இருக்கிறது என்று கேட்கிறார்கள். உங்களுக்காக ஒரு முகம் பெண் அருகேயும் இரண்டாவது முகம் ஆணின் அருகேயும் தேடிப்பாருங்கள். அந்த 2 முகங்களும் மாய முகம், எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் உன்னிப்பாகப் பார்த்து 2 முகத்தையும் கண்டுபிடியுங்கள்.
நீங்கள் இப்போது மிகவும் எளிதாக 2 முகங்களையும் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள். உங்களுக்கும் பாராட்டுகள். ஆனாலும், சிலரால் கண்டுபிடிக்க முடியவில்லை என்கிறார்கள். அவர்களுக்கு உதவி செய்ய இந்த படத்தில் மாயமாக மறைந்திருக்கும் 2 முகங்கள் எங்கே இருக்கிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம் பாருங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் படம் என்பது வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுமட்டுமல்ல ஒரு காட்சியைப் பார்க்கும்போது முழுவிவரத்துடன் பார்க்க உங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கிறது. தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.