Optical illusion game: தெற்கு உட்டாவில் உள்ள பிரைஸ் கனியன் தேசிப் பூங்காவில், உயரமான மெல்லிய பாறைகளுக்கு இடையே மறைந்திருக்கும் 2 சிங்கங்களை 22 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் நீங்கதான் கில்லி.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் பார்ப்பவர்களின் மாயாஜாலங்களை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஈர்த்து வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் சுவாரசியத்தில் மயங்கிப்போன நெட்டிசன்கள் லட்சக் கணக்கில் இணையத்தில் படையெடுத்து வருகிறார்கள்.

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், தெற்கு உட்டாவில் உள்ள பிரைஸ் கனியன் தேசிப் பூங்காவில், உயரமான மெல்லிய பாறைகளுக்கு இடையே மறைந்திருக்கும் 2 சிங்கங்களை 22 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது.
இந்த படம் மிகவும் பிரபலமான ஒரு புகைப்படம். அமெரிக்காவின், பிரைஸ் கனியன் தேசியப் பூங்கா, தெற்கு உட்டாவில் பரந்து விரிந்து கிடக்கிறது. உயரமான மெல்லிய பாறைகள் உள்ள கருஞ்சிவப்பு நிற ஹூடூக்களுக்கு பெயர் பெற்றது. இவை செங்குத்தான பாறை அமைப்புகளாகும். பூங்காவின் பிரதான சாலை, ரிம் டிரெயில் ஹைகிங் பாதைக்குக் கீழே அமைந்துள்ள ஹூடூ-நிரப்பப்பட்ட தாழ்வான விரிந்த பிரைஸ் ஆம்பிதியேட்டரைக் கடந்து செல்கிறது. இது சன்ரைஸ் பாயிண்ட், சன்செட் பாயிண்ட், இன்ஸ்பிரேஷன் பாயிண்ட் மற்றும் பிரைஸ் பாயிண்ட் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த பூங்காவை சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனம் நேரங்களில் பார்க்கலாம்.
பிரைஸ் கனியன் தேசியப் பூங்காவில் ஹூடுக்கள் படத்தில் பிரஷர்ஸ் லைவ் தளம் இரண்டு சிங்கங்களை இல்யூஷன் செய்து அவற்றை கண்டுபிடிக்க முயுமா என்று சவால் விடுத்துள்ளது.

இந்நேரம் நீங்கள் பாறைகளுக்கு நடுவே மறைந்திருக்கும் 2 சிங்கங்களை கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்கள் நிஜமாவே ஆப்டிகல் இல்யூஷன் புதிரில் விடை கண்டுபிடிப்பதில் கில்லி. உங்களுக்கு பாராட்டுகள்.
ஒருவேளை நீங்கள் இந்த படத்தில் மறைந்திருக்கும் 2 சிங்கங்களை 22 கண்டுபிடிக்கவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். உங்களுக்காக 2 சிங்கங்களும் எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம்.

ஆப்டிகல் இல்யூஷன் என்பது வெறுமனே ஒரு இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டு அல்ல. அது கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கிற விளையாட்டு. அதனால், தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“