scorecardresearch

ஆடுகளுக்கு இடையே மறைந்திருக்கும் ஓநாய்… 20 நொடிகளில் கண்டுபிடித்தால் நீங்க கிரேட்!

Optical illusion: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நெட்டிசன்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது. ஒரு புல்வெளியில் மந்தையாக மேய்ந்துகொண்டிருக்கும் ஆடுகளுக்கு இடையே ஒரு ஓநாய் வேட்டையாடுவதற்காக மறைந்திருக்கிறது. அதை 20 நொடிகளில் கண்டுபிடித்தால் உண்மையிலேயே நீங்க கிரேட்தான்.

ஆடுகளுக்கு இடையே மறைந்திருக்கும் ஓநாய்… 20 நொடிகளில் கண்டுபிடித்தால் நீங்க கிரேட்!

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நெட்டிசன்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்து திகைக்க வைக்கிறது. ஒரு புல்வெளியில் மந்தையாக மேய்ந்துகொண்டிருக்கும் ஆடுகளுக்கு இடையே ஒரு ஓநாய் வேட்டையாடுவதற்காக மறைந்திருக்கிறது. அதை 20 நொடிகளில் கண்டுபிடித்தால் உண்மையிலேயே நீங்க கிரேட்தான்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் புதிர்கள் வெறுமனே ஒரு பொழுதுபோக்கு புதிர் விளையாட்டாக மட்டுமல்லாமல் கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி தருகிற விளையாட்டாகவும் இருக்கிறது.

ஆப்டிகல் இல்யூஷன் படங்களுக்கான விடை தேடுவது என்பது அவ்வளது எளிதல்ல. அது வைக்கோல் போரில் ஊசியைத் தேடுவதைப் போன்றது. அந்த அளவுக்கு கடினமான சவலாக இருக்கும்.

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், ஒரு மேய்ச்சல் நிலப் புல்வெளியில் வெள்ளை நிற ஆடுகள் மந்தையாக மேய்ந்துகொண்டிருக்கின்றன. அங்கே ஆடுகளை வேட்டையாட ஒரு வெள்ளை நிற ஓநாய் வந்து ஆடுகளுக்கு இடையே மறைந்திருக்கிறது. அந்த ஓநாயை 20 நொடிகளில் கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான் சவால்.

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரே குளத்தில் நீர் அருந்தும் என்ற பைபிளில் ஒரு பிரபலமான வாசகமாக இருக்கிறது. இங்கே ஓநாயும் ஆடுகளும் ஒரே நிறத்தில் ஒரே மேய்ச்சல் நிலத்தில் இருக்கிறது. ஓநாய் ஆடுகளை வேட்டையாடுவதற்கு முன்பு அந்த ஓநாயைக் கண்டுபிடியுங்கள்.

யூடியூபில் வெளியான ஒரு வீடியோவில், ஆடுகள் மந்தையாக மேய்ந்துகொண்டிருக்கிறது. அதில் ஒரு ஓநாய் மறைந்திருக்கிறது. அந்த ஓநாய் எங்கே இருக்கிறது என்று கண்டுபிடித்தால் நிஜமாகவே நீங்கள் கிரேட்தான். ஏனென்றால், எது ஆடு எது ஓநாய் என்று கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு குழப்பமாக இருக்கிறது.

ஓநாயைக் கண்டுபிடித்துவிட்டால் உங்களுக்கு பாராட்டுகள். கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். உங்களுகு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். ஓநாயின் வாலை வைத்துதான் நீங்கள் கண்டுபிடிக்க முடியும். படத்தை மீண்டும் ஒருமுறை உற்று கவனித்துத் தேடுங்கள்.

ஓநாயைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். கண்டுபிடிக்கவில்லை என்றால் பரவாயில்லை. ஓநாய் எங்கே மறைந்திருக்கிறது என்று காட்டுகிறோம். நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Tamil App.

Web Title: Optical illusion can you spot the hidden wolf among sheep within 20 seconds you are great