Advertisment

இந்த படத்துல எத்தனை முகங்கள் இருக்கு… 15 நொடிகளில் கண்டுபிடிச்சா ஜீனியஸ்

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உள்ள கோட்டோவியத்தில் எத்தனை முகங்கள் இருக்கிறது என 15 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்கள்தான் ஜீனியஸ்.

author-image
WebDesk
New Update
Optical Illusion, Optical Illusion Pictures, Optical Illusion Viral Picture, Optical Illusion Animal Picture, Optical Illusion Viral Photos, ஆப்டிகல் இல்யூஷன், ஆப்டிகல் இல்யூஷன் படம், ஆப்டிகல் இல்யூஷன் சவால், spot the Optical Illusion Latest, about optical illusion,Optical Illusion photos, Optical Illusion pictures, Optical Illusion images

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தை ஒரு சூறாவளியைப் போலத் தாக்கி வருகிறது. ஆயிரக் கணக்கில் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெளியானாலும் அது நெட்டிசன்களுக்கு யானைப் பசிக்கு கொடுத்த சோளப் பொறியாகப் போதவில்லை. அந்த அளவுக்கு நெட்டிசன்கள் ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் தீராப் பசியுடன் இருக்கிறார்கள். ஆப்டிகல் இல்யூஷன் இணையப் பொழுது போக்கு புதிர் விளையாட்டாக மட்டுமில்லாமல், அது ஆர்வத்தைத் தூண்டுவதாகவும் கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கிற ஒன்றாகவும் இருக்கிறது.

Advertisment
publive-image

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உள்ள கோட்டோவியத்தில் எத்தனை முகங்கள் இருக்கிறது என 15 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்கள்தான் ஜீனியஸ்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒன்றும் பெரிய கடினமான புதிர் அல்ல. அதன் எளிமைதான் நெட்டிசன்களை ஒரு பெரிய ராட்சத காந்தம் போல ஈர்த்து வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மனிதர்கள் எப்படி ஒரு காட்சியைப் பார்த்து உணர்ந்து புரிந்துகொள்கிறார்கள் என்பதை அடிப்படையாக வைத்து உருவாக்கப்படுகிறது. சில படங்கள் இயல்பாகவே ஆப்டிகல் இல்யூஷன் கோணத்தில் அமைந்துவிடுகிறது. சில ஓவியங்கள் ஆப்டிகல் இல்யூஷன் ஓவியங்களாக வரையப்படுகின்றன.

publive-image

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் 1914-ம் ஆண்டு The Duluth Herald பத்திரிகையில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் ஒரு மனிதனின் கோட்டோவியம் இருக்கிறது. மேலோட்டமாகப் பார்த்தால் ஒரே முகம் மட்டுமே இருப்பது போலத் தெரியும் ஆனால், கூர்ந்து கவனித்தால் பல முகங்கள் இருப்பது தெரியவரும். அதனால், இந்த படத்தில் எத்தனை முகங்கள் இருக்கிறது என்று 15 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கதான் ஜீனியஸ். நீங்கள் ஜீனியஸ் என்பதை எல்லோருக்கும் காட்டுங்கள்.

நெட்டிசன்கள் சிலர் இந்தப் படத்தை சல்லடை போட்டு தேடிவிட்டு, இந்த படத்துல 4 முகங்கள் இருக்கிறது 5 முகங்கள் இருக்கிறது என்று கூறுகிறார்கள். ஆனால், ஜீனியஸ்கள் அதிகமான எண்ணிக்கையை சொல்கிறார்கள்.

இந்த படத்தில் எத்தனை முகங்கள் இருக்கிறது என்று கூறுகிறோம். அது நீங்கள் கண்டுபிடித்த முகங்களின் என்ணிக்கையுடன் பொருந்திப் போனால் நீங்கள்தான் ஜீனியஸ். இந்த படத்தில் மொத்தம் 10 முகங்கள் இருக்கிறது. விடையைப் பாருங்கள்.

publive-image

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டாக மட்டுமில்லாமல் கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிப்பவையாக இருப்பதால், நிறைய ஆப்டிகல் இல்யுஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Viral Viral Photo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment