/tamil-ie/media/media_files/uploads/2022/09/OI-Koala.jpg)
Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருகும் விலங்குகளைக் கண்டுபிடிப்பது என்பது மிகவும் சுவாரசியமானது மட்டுமல்ல த்ரில்லிங்கானதும்தான். நெட்டிசன்கள் ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் மறைந்திருக்கும் விலங்குகளை வெறித்தனமாகத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள், வேலை நெருக்கடிகளில் சிக்கி சோர்ந்து போய் இருக்கும் கணினியில் வேலையில் செய்யும் நெட்டிசன்களை ரிலாக்ஸ் செய்ய வைக்கிறது. அவர்களை மீண்டும் உற்சாகப்படுத்துகிறது. அதனால்தான் ஆப்டிகல் இல்யூஷன் படங்களுக்கான வரவேற்பு அதிகரித்துக்கொண்டே போகிறது.
/tamil-ie/media/media_files/uploads/2022/09/OI-Koala-1.jpg)
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் அடர்ந்த காட்டில் ஒரு கோலா கரடி அசையாமல் படுத்திருக்கிறது. அந்த கோலா கரடி எங்கே இருக்கிறது என்று 15 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று ஓபன் சேலஞ்ச் விடப்பட்டுள்ளது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் ஹீரோ நீங்கள்தான்.
ஆப்டிகல் இல்யூஷன் இன்று நேற்று உருவான ஒன்றல்ல, கி.மு. 3,500 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தே ஆப்டிகல் இல்யூஷன் இருந்ததாக கிரேக்க வரலாற்றை மேற்கோள் காட்டி கூறுகிறார்கள். கி.மு 4 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க தத்துவ அறிஞர் அரிஸ்டாடில் ஆப்டிகல் இல்யூஷன் பற்றி குறிப்பிடுகிறார். இந்தியாவில் பண்டைய கால சிற்பங்களை இன்று ஆப்டிகல் இல்யூஷன் கோணத்தில் பார்க்கிறார்கள். அதனால், ஆப்டிகல் இல்யூஷன் என்பது நமக்கு புதிதல்ல.
/tamil-ie/media/media_files/uploads/2022/09/New-Project-2022-09-28T123627.534.jpg)
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் லேட்டஸ்ட் நியூஸ் பிரஷர்ஸ்லைவ் தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் ஒரு அடர்ந்த காடு இருக்கிறது. இந்த காட்டில், ஒரு கோலா கரடி சத்தமில்லாமல் மறைந்திருக்கிறது. அதை 15 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று ஓபன் சேலஞ்ச் விடப்பட்டுள்ளது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் ஹீரோ நீங்கள்தான். ஏனென்றால், கோலாவைக் கண்டுபிடிப்பது என்பது அவ்வளவு சுலபமல்ல. ஸ்மார்ட்டாகத் தேடினால் மட்டுமே முடியும்.
கோலா கரடி ஆஸ்திரேலியா காடுகளில் அதிகம் காணப்படுகிறது. கோலாக்கள் அனைவராலும் கனிவாகப் பார்க்கப்படுகிறது. இந்த படத்திலும் ஒரு கோலா கரடி இருக்கிறது. அது எங்கே இருக்கிறது நீங்களும் கொஞ்சம் தேடிப் பாருங்கள்.
இந்நேரம் நீங்கள் இந்த காட்டில் சத்தமில்லாமல் மறைந்திருக்கும் கோலா கரடியைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள் நிஜமாகவே ஹீரோதான். ஏனென்றால், கோலாவைக் கண்டுபிடிப்பது மிகவும் ஒரு கடினமான சவால். உங்களுக்கு பாராட்டுகள்.
ஒருவேளை, நீங்கள் இன்னும் கோலா கரடியைக் கண்டுபிடிக்கவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம் அது எங்கே மறைந்திருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம்.
/tamil-ie/media/media_files/uploads/2022/09/New-Project-2022-09-28T123702.514.jpg)
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டாக மட்டுமில்லாமல் கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிப்பவையாக இருப்பதால், நிறைய ஆப்டிகல் இல்யுஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.