Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிப்பவையாக இருக்கும். அதே போல, சில நேரங்களில் வாழ்க்கைத் தத்துவத்தோடும் பொருந்திப்போகும். ஆப்டிகல் இல்யூஷன் படம் எப்படி வாழ்க்கைத் தத்துவத்துடன் பொருந்திப் போகும் என்று கேட்கிறீர்களா?
“கண்ணை நம்பாதே, உன்னை ஏமாற்றும்
நீ காணும் தோற்றம், உண்மை இல்லாதது
அறிவை நீ நம்பு, உள்ளம் தெளிவாகும்
அடையாளம் காட்டும், பொய்யே சொல்லாதது
காவலரே வேஷமிட்டால் கள்வர்களும் வேறுருவில்
கண் முன்னே தோணுவது சாத்தியமே
காத்திருந்து கள்வனுக்கு கைவிலங்கு பூட்டிவிடும்
கண்ணுக்கு தோணாத சத்தியமே
போடும் பொய்த்திரையை கிழித்து விடும் காலம்
புரியும் அப்போது மெய்யான கோலம்” இது கவிஞர் மருதகாசி எழுதிய எம்.ஜி.ஆர் படப் பாடல். இந்த தத்துவப் பாடல் வாழ்க்கைக்கு மட்டும் அல்ல ஆப்டிகல் இல்யூஷன் படத்துக்கும் பொருந்தும்.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், ஒரு காட்டுப் பகுதியில் ஆடுகள் மேய்ந்துகொண்டிருக்கிறது. அப்போது அங்கே ஒரு ஓநாய் வருகிறது. ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரே இடத்தில் இருக்கிறது. இதில், ஓநாய் எங்கே இருங்கிறது என்று 10 நொடிகளில் கண்டுபிடித்தால் நீங்கதான் ஆப்டிகல் இல்யூஷன் புதிர்களை விடுவிப்பதில் கில்லி. ஏனென்றால் இந்த புதிர் மிகவும் கடினமானது.
ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் மறைந்திருக்கும் விலங்குகளைத் தேடுவது என்பது வைக்கோல் போரில் ஊசியைத் தொலைத்துவிட்டு தெடுவதைப் போன்றது. உங்களால் யோசிக்கவே முடியாத இடத்தில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும். ஆனால், கொஞ்சம் ஸ்மார்ட்டாக யோசித்து தேடினால் எளிதாக கண்டுபிடித்துவிடலாம்.
அதனால்தான், ஆப்டிகள் இல்யூஷன் என்பது ஒரு தந்திரம். ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு மாயாஜாலம். ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு கண்கட்டி வித்தை. ஆப்டிகல் இல்யூஷன் என்பது டிஜிட்டல் உலகத்தின் கண்ணாமூச்சி விளையாட்டு. ஆனால், அது மிகவும் சுவாரசியமானது. நீங்கள் ஒருமுறை முயற்சி செய்து தேடிப்0 பார்த்தால் பிறகு, பிறகு தேடிக்கொண்டே இருப்பீர்கள்.
“ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரே குட்டையில் நீர் அருந்தும்” என்ற விவிலியத்தின் பிரபலமான வசனத்தை, இந்த புகைப்படம் நினைவுபடுத்துவது போல இருக்கிறது. ஆனால், இதில் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் நீர் அருந்தவில்லை. ஆனால், ஒரே இடத்தில் இருக்கிறது. ஆனால், ஆட்டுக்குட்டிகள் நன்றாகத் தெரிகிறது. ஓநாய் எங்கே இருக்கிறது என்று தெளிவாகத் தெரியவில்லை. ரோஜ்கர்லைவ்.காம் (rojgarlive.com) தளத்தில் வெளியாகி உள்ள இந்த படத்தில், ஓநாய் எங்கே இருக்கிறது என்று 10 நொடிகளில் கண்டுபிடிக்க உங்களுக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால், ஆப்டிகல் இல்யூஷனில் நிஜமாவே நீங்கதான் கில்லி.
இந்நேரம் நீங்கள் இந்த படத்தில் ஓநாயைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். 10 நொடிகளுக்குள் ஓநாயைக் கண்டுபிடித்துவிட்டிருந்தால், ஆப்டிகல் இல்யூஷனில் நிஜமாவே நீங்கதான் கில்லி. உங்களுக்கு பாராட்டுகள்.
ஒருவேளை, உங்களால் ஓநாயைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். நீங்கள் எப்படி தேடினாலும் கிடைக்காது. ஆனால், ஜூம் செய்து நன்றாக உற்றுப் பார்த்தால் கண்டுபிடிக்கலாம்.
இன்னும் உங்களால் இந்த படத்தில் மறைந்திருக்கும் ஓநாயைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், பரவாயில்லை. உங்களுக்காக ஓநாய் எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.