Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் விடப்படும் சவால்கள் வெறுமனே அது படத்தில் மறைந்திருக்கும் விலங்குகள், பறவைகளைக் கண்டுபிடிப்பதாக மட்டுமில்லாமல் சில தகவல்களையும் சொல்வதாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவால் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்திலும் சமூக வலைதளங்களிலும் ஒரு சூறாவளியைப் போலத் தாக்கி வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் என்றதுமே நெட்டிசன்கள் பரபரப்பாகி படங்களைப் பார்த்து விலங்குகளைத் தேடத் தொடங்கிவிடுகிறார்கள்.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், அடர்ந்த காட்டில் ஒரு அண்டங் காக்கை மறைந்திருக்கிறது. அந்த காக்கை எங்கே இருக்கிறது என்று 20 நொடிகளில் கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் ‘அப்பா டக்கர்’ நீங்கள்தான். ‘அப்பா டக்கர்’ என்றால் என்ன என்று யோசிக்கிறீர்களா? அதற்கான விளக்கம் நீங்கள் அண்டங் காக்கையைக் கண்டுபிடித்தால் கூறுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள், பொதுவாக மனிதர்கள் ஒரு காட்சியை எப்படிப் பார்த்து உணர்ந்து புரிந்துகொள்கிறார்கள் என்பதை அடிப்படையாக வைத்து வடிவமைக்கப்படுகிறது அல்லது அதற்கு ஏற்ற படங்களைத் தேர்வு செய்து சவால் விடப்படுகிறது. ஆப்டிகல் இல்யூஷன் சவால்கள் ஒரு படத்தைக் கூர்மையாகப் பார்க்க பயிற்சி அளிக்கிறது.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் லேட்டஸ்ட் நியூஸ் பிரஷர்ஸ்லைவ் தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் ஒரு அடர்ந்த காடு உள்ளது. இந்த அடர்ந்த காட்டில் ஒரு அண்டங் காக்கை மறைந்திருக்கிறது. அண்டங் காக்கை எங்கே உள்ளது என்று 20 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால், ஆப்டிகல் இல்யூஷன் சவால்களில் விடை கண்டுபிடிப்பதில் நீங்கள்தான் ‘அப்பா டக்கர்’. அப்பா டக்கர் என்றால் என்ன என்று கேட்கிறீர்களா?
மகாத்மா காந்திக்கு பல்வேறு பொது அறிவு விஷயங்களைக் கேட்டு கடிதம் வரும். காந்தியின் ஆசிரமத்தில் இருந்தவர்தான் தக்கர் பாபா. பாபா என்றால் தந்தை, தக்கர் என்பதை ஆங்கிலத்தில் டக்கர் என்று எழுதப்பட்டது. இவர் எல்லா விஷங்களைப் பற்றியும் பதில் அளிப்பார். எல்லா விஷயங்களையும் பற்றி தெரிந்த ஒருவரைக் குறிப்பிடவே நீ என்ன அப்பா டக்கரா என்று கேட்கத் தொடங்கினார்கள். இந்த அப்பா டக்கர் என்ற வார்த்தை இப்படித்தான் மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது.
அண்டங் காக்கை என்பது மிகவும் கருப்பு நிறத்தில் இருக்கும். சாதாரண காகங்களின் உடலில் சாம்பல் நிற முடிகள் இருக்கும். ஆனால், இந்த அண்டங் காக்கை முழுவதும் கருப்பாக இருக்கும்.
இந்நேரம், நீங்கள் இந்த படத்தில் உள்ள அடர்ந்த காட்டில் மறைந்திருக்கும் அண்டங் காக்கையைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்கள் நிஜமாவே ஆப்டிகல் இல்யூஷனில் ‘அப்பா டக்கர்’தான். உங்களுக்கு பாராட்டுகள்.
ஒருவேளை நீங்கள் இன்னும் அண்டங் காக்கையைக் கண்டுபிடிக்கவில்லை என்றால், உங்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். அண்டங் காக்கை மரக் கிளையில் இருக்கிறது. இப்போது படத்தை மீண்டும் ஒருமுறை நன்றாக உற்றுப் பார்த்து கண்டுபிடியுங்கள்.
நீங்கள் இன்னும் அடர்ந்த காட்டில் மறைந்திருக்கும் அண்டங் காக்கையைக் கண்டுபிடிக்கவில்லை என்றால், அண்டங் காக்கை எங்கே இருக்கிறது என வட்டமிட்டு காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு சுவாரசியமான இணையப் பொழுதுபோக்கு விளையாட்டு மட்டுமல்ல. அது உங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கிற விளையாட்டு. அதனால், தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் வெளியாகியுள்ள ஆப்டிகல் இல்யூஷன் சவால்களை ஏற்று பயிற்சி செய்யுங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.