Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் சுவாரசியத்திற்குக் காரணம், அது நகல்களுக்கு இடையே அசலைக் கண்டுபிடிப்பது போன்றது. காகிதப் பூக்களுக்கு இடையே நிஜமானப் பூக்களைக் கண்டுபிடிப்பது போன்றது. இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலும் அப்படித்தான் ட்ரை பண்ணி பாருங்கள்.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் நாய் பொம்மைகளுக்கு இடையே ஒரு நிஜமான நாய் மறைந்திருக்கிறது. நிஜ நாய் எங்கே மறைந்திருக்கிறது என 20 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் கிங்.
“கண்ணை நம்பாதே, உன்னை ஏமாற்றும்
நீ காணும் தோற்றம், உண்மை இல்லாதது
அறிவை நீ நம்பு, உள்ளம் தெளிவாகும்
அடையாளம் காட்டும், பொய்யே சொல்லாதது” எம்.ஜி.ஆர் நடித்த நினைத்ததை முடிப்பவன் பாடலில் இடம்பெற்ற இந்த பாடல், வாழ்க்கைத் தத்துவத்துக்கு மட்டுமல்ல, ஆப்டிகல் இல்யூஷன் படங்களுக்கும் பொருந்தும்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே உங்கள் கண்களை ஏமாற்றும், மூளையைக் குழப்பும், தலைமுடியைப் பிச்சிக்கொள்ளச் செய்யும். ஆனால், நீங்கள் கொஞ்சம் ஸ்மார்ட்டாக யோசித்து தேடினால் எளிதாகக் கண்டுபிடித்து விடலாம்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் The Sun தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் நிறைய நாய் பொம்மைகள் கூட்டமாக வைக்கப்பட்டுள்ளன. முதலில் பார்த்தால் யாரும் இதை நாய் பொம்மை என்று சொல்லமாட்டார்கள் நிஜமான நாய்கள் என்றுதான் சொல்வார்கள். ஆனால், இந்த பொம்மை நாய்களுக்கு இடையே ஒரு நிஜமான நாய் மறைந்திருக்கிறது. அந்த நிஜமான நாய் எங்கே மறைந்திருக்கிறது என 20 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையா பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் கிங். ஏனென்றால், இந்த சவால் அந்த அளவுக்கு கடினமானது.
நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பொம்மை நாய்களுக்கு இடையே மறைந்திருக்கும் உண்மையான கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் கிங்தான். உங்களுக்கு பாராட்டுகள்.
ஆனால், பலரும் இந்த படத்தில் உண்மையான நாய் எங்கே இருக்கிறது என தெரியவில்லை என்று கூறுகிறார்கள். சிலர் பொம்மை நாயைக் காட்டி உண்மையான நாய் என்கிறார்கல். ஆனால், ஆப்டிகல் இல்யூஷனில் கிங் என்று கூறுபவர்கள் எளிதாகக் கண்டுபிடித்துவிட்டதாகக் கூறுகிறார்கள்.
சிலர் உண்மையான நாய் எங்கே இருக்கிறது என்று கேட்கிறார்கள். அவர்களுக்காக இந்த படத்தில் நாய் எங்கே மறைந்திருக்கிறது என்று கண்டுபிடிக்க ஒரு குறிப்பு தருகிறோம். படத்தின் வலது மூலையில் பாருங்கள். நாய் தென்படலாம்.
இப்போது நீங்கள் உண்மையான நாயைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நிஜமாவே நீங்கள் கிங்தான். இன்னும் கண்டுபிடிக்காதவர்களுக்கு நிஜமான நாய் எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.