Advertisment

டெலஸ்கோப் மூலம் மனைவியைத் தேடும் மாலுமி; உங்களால் 13 நொடியில் கண்டுபிடிக்க முடியுமா?

Optical illusion: இந்த விண்டேஜ் ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், டெலஸ்கோப் மூலம் ஒரு மாலுமி தனது மனைவியைத் தேடுகிறார். நீங்கள் 13 நொடிகளில் மாலுமியின் மனைவியைக் கண்டுபிடித்து உதவி செய்ய முடியுமா? முயற்சி செய்து பாருங்கள்.

author-image
WebDesk
New Update
ss

Optical illusion challenge Image Credit: Playbuzz

Optical illuison game: இது உங்கள் கூர்மையான பார்வைத் திறனையும் கவனிக்கும் திறனையும் சோதனை செய்வதற்கான ஆப்டிகல் இல்யூஷன் படம், அதிக நுண்ணறிவு உள்ளவர்கள் இந்த ஆப்டிகல் இல்யூஷன் சோதனையை தீர்க்க முடியும். 

Advertisment

dd

இந்த விண்டேஜ் ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், டெலஸ்கோப் மூலம் ஒரு மாலுமி தனது மனைவியைத் தேடுகிறார்.13 நொடிகளில் மாலுமியின் மனைவியைக் கண்டுபிடித்து கொடுத்து அவருக்கு உங்களால் உதவி செய்ய முடியுமா? முயற்சி செய்து பாருங்கள்.

ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு பொருள், வரைதல் அல்லது ஒரு நபரின் மனதைக் குழப்பும் ஆழமாக கவர்ந்திழுக்கும், வடிவத்தை மாற்றும் படம், இது விஷயங்களை உணரும் மூளையின் வழியை சவால் செய்கிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மனோ பகுப்பாய்வுத் துறையின் ஒரு பகுதியாக் உள்ளது என்பதை ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒரு காட்சியை நீங்கள் எப்படிப் பார்த்து உணர்கிறீர்கள் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. ஒரு சாதாரண மனித மூளை ஒவ்வொரு கோணத்திலிருந்தும் வித்தியாசமான உணர்வை உருவாக்கும் வடிவங்களை அல்லது படங்களைப் பார்க்க முடியும். அந்த வகையானதுதான் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம்.

dd

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் ஒரு விண்டேஜ் படம், Playbuzz தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் ஒரு மாலுமி தனது மனைவியை டெலஸ்கோப் மூலம் கடலை நோக்கிப் பார்த்து தேடிக் கொண்டிருக்கிறார். ஆனால், அந்த மாலுமியால் கண்டுபிடிக்க முடியாத மனைவியை உங்களால் கண்டுபிடித்து தர முடியும். இந்த படத்தில் மாலுவியின் மனைவி எங்கே மறைந்திருக்கிறார் என 13 நொடிகளில் கண்டுபிடித்து தரமுடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள் ஜீனியஸ். நீங்கள் ஜீனியஸ் என்று நிரூபிப்பதற்கான நேரம் இது.

நீங்கள் இந்நேரம் மாலுமியின் மனைவியைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். உங்களுக்கு பாராட்டுகள். நீங்கள் நிஜமாகவே ஜீனியஸ்தான்.

ஒருவேளை உங்களால் மாலுமியின் மனைவியைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். சில புதிர்களை தலைகீழாக நின்றாலும் கண்டுபிடிக்க முடியாது. ஆனால், இந்த புதிரில் நீங்கள் தலைகீழாக நிற்க வேண்டாம். படத்தை தலைகீழாகத் திருப்பிப் பாருங்கள் மாலுமியின் மனைவி கிடைப்பார்.

இப்போது நீங்கள் மிக எளிதாக மாலுமியின் மனைவியைக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள். உங்களுக்கும் பாராட்டுகள். ஆனாலும், சிலரும் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள். அவர்களுக்காக மாலுமியின் மனைவி எங்கே இருக்கிறார் என வட்டமிட்டுக் காட்டுகிறோம்.

ff

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral Photo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment